தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : மார் 24, 2017 10:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2017 10:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* குழந்தைக்கு தாய்மாமா மடியில் அமர்ந்து காது குத்த வேண்டுமா?

ஜி.சிவானந்தம், செஞ்சி.

தாயை 'அம்மா' என்கிறோம். தாய்மாமாவை 'அம்மான்' என்றார்கள். தாயும், தாய்மாமனும் ஒன்று. தாய் பெற்றெடுக்கிறாள். தாய்மாமா தான் பெற்ற குழந்தைகளை சகோதரி குழந்தைக்கு சம்பந்தம் பேசுகிறார். குடும்ப ஒற்றுமை கருதி ஏற்படுத்தப்பட்ட பழக்கம் இது.

மடங்களுக்கு நிறைய சொத்து உள்ளதே. இது சரிதானா?

த.அபிராமி, பள்ளிக்கரணை.

மடத்து சொத்துக்கள் மூலம் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அன்னதானம், கோவில் பராமரிப்பு, சமூகப்பணிகள் நடக்கின்றன. வசதி படைத்தவர்கள் இதற்கு நிதி அளிக்கிறார்கள். நல்லது நடந்தால் கட்டாயம் வரவேற்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்கவும், நன்றாகப் படிக்கவும் பரிகாரம் சொல்லுங்கள்.

ஆர்.அபிதா, கூடுவாஞ்சேரி.

நன்றாகப் படிக்க புதன்கிழமைகளில் நவக்கிரக மண்டபத்திலுள்ள புதனுக்கு குழந்தை பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். படுக்கச் செல்லும் முன் ஆன்மிகக் கதைகளைச் சொல்லுங்கள்.



கோவிலுக்கு செல்ல நேரம் பார்க்க வேண்டுமா?

ம.வாசுதேவன், ஒண்டிப்புதூர்.

ஒன்றைச் செய், அதை நன்றே செய், அதை இன்றே செய்.

* ஒருவரது அஸ்தியை சேகரித்ததும், எரியூட்டிய இடத்தில் நவதானியங்களைத் தெளிப்பது ஏன்?

டி.அருணகிரி, மதுரை.

நவதானியம் தெளித்த இடத்தில் ஒன்றிரண்டு நாட்களில் புல் முளைத்து விடும். 'அவர் போன இடத்தில் புல் முளைத்து விட்டது' என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். மயானம் கூட பசுமையாக இருக்க வேண்டும் என்பது அறிவியல் நோக்கம். இவர் மறைந்தாலும், இவரது வம்சம் தழைத்து வளர வேண்டும் என்பது ஆன்மிக காரணம்.

** நீர்நிலைகளின் கரைகளில் கோவில்கள் அமைத்தது ஏன்?

எஸ்.மோக் ஷிதா, முருகம்பாக்கம்.

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்த ஏரி, ஆறு, கடற்கரைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டன. தண்ணீரை மாசு படுத்தினால் உலகம் அழிந்து விடும்

என்பதால், அவற்றை புனித தீர்த்தங்களாக அறிவித்தனர். அதை மதிக்காமல் மாசுபடுத்தியதன் விளைவை உலகம் இன்று அனுபவிக்கிறது.

பிறந்தநாளில் நீண்ட ஆயுள் பெற என்ன செய்யலாம்?

ஆர்.சாந்தாராமன், தாம்பரம்.

கோவிலில் அர்ச்சனை செய்யுங்கள். குலதெய்வத்தை வழிபடுங்கள். ஏழைகளுக்கு உதவி, முதியோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

கோவிலுக்குள், சுவாமியைத் தவிர மற்ற யாரையும் வணங்கக்கூடாதா?

பி.கவிதா, கே.வடமதுரை.

மகான்கள் இருந்தால் கூட வணங்கக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us