தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூன் 09, 2017 01:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2017 01:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** தேவாரம் பாடி முடிந்ததும் 'திருச்சிற்றம்பலம்' எனக் கூறுவது ஏன்?

அ.பழனிக்குமார், விருதுநகர்.

கோவில் என்றால், அது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். இங்கு தான் எல்லா சிவன் கோவில்களிலுள்ள சக்திகளும் இரவு நேரத்தில் ஒடுங்கும் என்பது ஐதீகம். சிதம்பரத்தை முதன்மையாக வைத்தே தேவாரம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' என்பது சிதம்பரம். சிவபெருமானேதன்னை 'திருச்சிற்றம்பல முடையான்' எனக் கூறுவதாக வரலாறு சொல்கிறது. சிதம்பரத்தை தினமும் நினைவு கூர வேண்டும் என்பதன் அடிப்படையில் தேவாரம் பாடும் முன்னும், பின்னும் 'திருச்சிற்றம்பலம்' என கூறும் வழக்கம் ஏற்பட்டது.

* தானம், தர்மம் இரண்டில் எது சிறந்தது?

ஜே.ஏ.கே.நியாஸ், மஞ்சக்குப்பம்

இல்லாதவர்களுக்குக் கொடுப்பது தானம். உதவி மட்டுமின்றி, மனிதன் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு உள்ளிட்ட நல்ல செயல்களைத் தர்மம் என்பர். இரண்டுமே சிறந்தது தான்.



* சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சரி தானா?

கே.மீனாட்சி, மதுரை

சரி தான். இதில் சங்கல்பம் (நம் விருப்பத்தை கடவுளிடம் தெரிவித்தல்) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அருளும் ஆற்றல் கொண்டவர் கடவுள் என நம்புபவர்கள், சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.



இலையில் பரிமாறும் போது முதலில் உப்பு வைப்பது ஏன்?

ம.வாசுதேவன், ஒண்டிப்புதூர்.

உப்பை லட்சுமியின் அம்சமாகக் கருதுவர். உணவில் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இனிப்பு வைத்த பிறகு மற்றதைப் பரிமாறுகிறார்கள்.

பதவி உயர்வுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம் இருக்கிறதா?

ஆர்.பிரபு, கோயம்புத்தூர்

உண்மை, உழைப்பு, விடாமுயற்சி இருந்தால், கடவுள் நீங்கள் விரும்பும் பதவி உயர்வைத் தருவார். இதற்கு பக்கபலமாக

'உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்

ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்

ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்'

என்ற நரசிம்மர் ஸ்லோகத்தை ஜெபித்து வாருங்கள்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கண்திருஷ்டிக்கு பரிகாரம் சொல்லுங்கள்.

எஸ்.புவனா, சென்னை

கன்னம், இரு புறங்கைகளில் பொட்டு வைக்கலாம். குழந்தையுடன் வெளியில் சென்று வந்தால், ஓரிரு மிளகாய் வத்தல், சிறிது உப்பு, வீட்டு வாசல் மண் மூன்றையும் கையில் வைத்து குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி, வெளியே போட்டு விடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us