தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூன் 23, 2017 09:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2017 09:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** நினைத்தது நிறைவேறாத போது கடவுளைத் திட்டுவது நியாயமா?

ஆர்.நிரஞ்சனா, கூடுவாஞ்சேரி

கேட்டதையெல்லாம் கொடுத்தால் குழந்தைக்கு தீங்கு நேரலாம். கடவுளின் குழந்தைகளான நமக்கு, எது நல்லது, எது கெட்டது என்பதை அறிந்து தேவையானதை வழங்குவார். கொடுக்கா விட்டால் குழந்தை அழுவது போல, நிறைவேறாவிட்டால் கடவுளை திட்டுகிறோம். அதற்காக, கடவுள் நம்மிடம் கோபித்துக் கொள்ள மாட்டார். குழந்தையின் பேச்சாக நினைத்து ஆனந்தமடைவார்.

விலங்கு, பறவை கூட வழிபாடு செய்ததாக தல வரலாறுகள் கூறுகிறதே....

எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

தேவர்கள் தங்களுக்கு வந்த சாபத்தால் விலங்கு, பறவை வடிவம் ஏற்று கடவுளை வணங்கியுள்ளனர். இறைவனிடம் பக்தி செலுத்துவதில் ஜாதி, மதம், மொழி, இனம், மனித, மிருக வேறுபாடுகள் கிடையாது என்னும் உண்மை இதன் மூலம் தெரிய வருகிறது.

* விரத நாளில் பகலில் தூங்கலாமா.... கூடாதா?

த.பிரகாஷ் பொள்ளாச்சி.

விரதம் என்பதற்கு, 'நாள் முழுவதும் இறை சிந்தனையுடன் சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது' என பொருள்.

மூலவரைச் சுற்றி வரும் போது வெளியேறும் அபிஷேக தீர்த்தத்தை தாண்டக் கூடாதாமே.....

ரா.கஸ்தூரி, திருக்கோவிலூர்

தாண்டக் கூடாது என்பதற்காக கோமுகத்திலிருந்து விழும் அபிஷேக நீரை தரைக்குக் கீழ் வெளியேற்றும் முறை கையாளப்படுகிறது. சுவாமிக்கு சாத்திய பூக்களையும் தாண்டிச் செல்லக்கூடாது.

கோயிலிலுள்ள பாம்பு புற்றை இரவில் சுற்றலாமா?

வி.ஜெயம்,விருகம்பாக்கம்.

தோட்டம் அல்லது நடமாட்டம் இல்லாத கோயிலில் புற்றைச் சுற்றினால் நாகங்களைத் தொந்தரவு செய்வதாகி விடும். கோயில் இருக்கும் சூழலைப் பொறுத்து சுற்றுங்கள்.

அர்ச்சகர் கொடுத்த பூக்களை வீட்டிலுள்ள சுவாமி படத்துக்கு அணிவிக்கலாமா?

என்.ஜெயன், திருப்பூர்

ஒரு சுவாமிக்கு சாத்திய பூக்களை மற்ற எந்த சுவாமிக்கும் சாத்தக் கூடாது.



* குலதெய்வ வழிபாட்டிலும் முதற்கடவுள் விநாயகரை வழிபட வேண்டுமா?

என்.எச்.ராமன், தேனி

எந்த வழிபாடாக இருந்தாலும் முதலில் விநாயகரை பூஜிக்க வேண்டும். துவங்கும் செயலில் இடையூறு செய்யும் சில தீயசக்திகள் உள்ளன. இவை மனித வடிவத்திலோ, வேறு வகையிலோ தடைகளை ஏற்படுத்தும். இவற்றை அடக்கியாள சிவனால் படைக்கப்பட்டவர் விநாயகர். 'இடர் கடி கணபதி வர அருளினன்' என ஞானசம்பந்தர், தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us