தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூலை 14, 2017 09:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2017 09:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முகூர்த்த நேரம் முடிந்த பின் தாலிகட்ட நேர்ந்தது. இதற்குப் பரிகாரம் உண்டா?

வி.எம்.பிரேமாவதி, மதுரை

இறையருளால் நிகழ்ந்ததாக அதாவது, இதுதான் முகூர்த்தம் என சுவாமியே நடத்தி வைத்ததாக மகிழ்ச்சியோடு இருங்கள். விநாயகருக்கு

சிதறுகாய் உடைத்தால் போதும்.

* ஆண் குழந்தைக்கு காது குத்துவது தேவையா?

ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்.

இருபாலாருக்குமே காது குத்தலாம். இதை கர்ண வேதனம் அல்லது கர்ண பூஷணம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

அரசுப்பணி கிடைக்க என்ன வழிபாடு செய்யலாம்?

சி.பழனிசாமி, சென்னை.

முதலில் அரசுப்பணி கிடைப்பதற்கு தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். பின் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து வழிபட்டால், விநாயகர் அருள்பாலிப்பார்.

* பிரார்த்தனை நிறைவேறாவிட்டால் 'கடவுளே....கண் இல்லையா' எனத் திட்டுகிறோம். இதனால் பாவம் நேருமா?

எம்.என்.கண்ணன் நீலகிரி.

கடவுளிடம் உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி செய்யமாட்டார்கள். இறைவன் எல்லாம் அறிந்தவர். நமக்கு வேண்டியதை எப்போது தரவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தவோ, கோபிக்கவோ மாட்டார். ஆனாலும் இது பாவச்செயல் என்பதை உணர்ந்து இறைநம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தை வரம் பெற எந்த விரதம் மேற்கொள்ளலாம்?

எஸ். ரமா, கோயம்புத்தூர்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் நெய் பிரசாதம் பெற்று தினமும் சாப்பிட வேண்டும். இவற்றுடன் பிரதோஷ விரதமும் இருந்தால் குழந்தை நிச்சயம் பிறக்கும்.

பூஜையறையில் சுவாமி படங்களை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?

த.காமராஜ், வெண்கரும்பூர்.

தெற்கு தவிர மற்ற திசை நோக்கி வைக்கலாம்.

**உடல்தானம், உறுப்பு தானத்தை ஆன்மிகம் ஏற்கிறதா?

என்.பரமகுரு, சென்னை.

உடல் தீயில் கருகும் முன் உறுப்புக்கள் பிறர் பயன்பட தானமளிப்பது நல்லதுதானே! 'பரோபகாராய இதம் சரீரம்' என்று ஒரு ஸ்லோகமே இருக்கிறது.

கையில் கருப்பு தவிர்த்த நிறத்தில் கயிறு கட்டலாமா?

எஸ்.குமார், குனியமுத்தூர்

இது அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. எது ஒத்துக் கொள்கிறதோ அதைக் கட்டலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us