ADDED : ஆக 04, 2017 12:25 PM

சுவாமிக்கு கறந்த பால், காய்ச்சிய பால் எதை பிரசாதமாக வைக்க வேண்டும்?
என்.சுகுமாறன், பெங்களூரு
அபிஷேகத்திற்கு கறந்த பால், நைவேத்யத்திற்கு காய்ச்சிய பால் பயன்படுத்த வேண்டும்.
கோயிலில் ஏற்றிய சூடம் பாதியில் அணைந்தால் அப சகுனமா?
த.நேரு, வெண்கரும்பூர்.
காற்று அதிகமாக அடிக்கும் போது நிகழும் இதை தவறாக கருத வேண்டாம்.
* விபூதி, குங்குமத்தை வயதில் பெரியவர்களுக்கு, சிறியவர்கள் வைக்கக் கூடாது என்பது உண்மையா?
பி.நாகலட்சுமி, கிழக்கு தாம்பரம்.
விபூதி, குங்குமம் வைப்பது என்பது ஆசியளிப்பதாகும். இதை பெரியவர்களுக்கு, சிறியவர்கள் செய்வது சரியானதல்ல.
* தெரிந்தே தப்பு செய்யும் சிலர் பக்தர்களாக இருக்கிறார்கள். இவர்களை திருத்துவது எப்படி?
ஆர்.பூமாதேவி, புதுச்சேரி.
பக்தி என்னும் கோணத்தில், நல்லவர்களாக பார்க்கப்படுவதால் இவர்கள் தப்பி விடுகிறார்கள். எப்படியாவது போகட்டும் என விடவும் முடியாது. நெருக்கமானவர்கள் தியாக மனதுடன் திருத்த முயற்சித்தால் இறைவன் துணை நின்று வழிகாட்டுவார்.
ஆடு, மாடுக்கு கழுத்தில் மணி கட்டுவது கட்டாயமா?
எம்.என்.கண்ணன்,நீலகிரி
ஆடு, மாட்டிற்கு கழுத்தில் மணிகட்டுவது அவசியம். மணியின் ஓசை மங்களகரமானது. ஓசை கேட்டு பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் ஓடிவிடும். மேய்ச்சலில் இது பாதுகாப்பாக இருக்கும்.
