தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஆக 11, 2017 09:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2017 09:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்பாபிஷேக நாள், சாதாரண நாள் இரண்டுக்கும் வழிபாட்டில் வேறுபாடு உண்டா?

வி.கல்யாணக்குமார், நஞ்சுண்டாபுரம்

உலக நன்மைக்காக செய்யும் வழிபாடு கும்பாபிஷேகம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அதில் பங்கேற்பதாக ஐதீகம். பல ஆண்டுகள், கோயிலில் தரிசித்த பலன் உண்டாகும். சாதாரண நாளில் தரிசிப்பது அன்றைய நாளில் நற்பலன் தரும்.



காகத்திற்கு சோறிடும் போது எள் சேர்த்து தான் வைக்க வேண்டுமா?

எம்.ரேவதி, மேட்டுப்பாளையம்.

திதி கொடுக்கும் நாளில் மட்டும் எள் சேர்த்து வைக்க வேண்டும். மற்ற நாட்களில் வேண்டாம்.



* செலவில்லாமல் எளிமையாக முன்னோரை எப்படி வழிபடலாம்?

ம.வாசுதேவன், கோவை

அமாவாசை அன்று செய்யும் தர்ப்பணம் செலவில்லாதது. அவர்களது நினைவு நாளில் திதி கொடுத்தலை சக்திக்கு இயன்ற அளவில் செய்யலாம். செலவை விட, அவர்களை மறக்காமல் வழிபடுதலே முக்கியம்.

ஈர ஆடையுடன் கோயில் வழிபாடு செய்யக் கூடாதாமே....ஏன்?

ஆ.கண்ணதாசன், வளசரவாக்கம்.

ஈரத்துணியுடன் வழிபட சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. இறந்த வீட்டில் செய்யும் ஈமக்கிரியைகளை மட்டும் ஈர ஆடையுடன் செய்யலாம்.

பூஜையின் போது விளக்கு பட்டு ஆடையில் தீப்பிடித்தது. பரிகாரம் செய்ய வேண்டுமா?

என்.காசிச்செட்டி, திண்டிவனம்.

உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டி தோஷத்தை சுவாமியே சரி செய்து விட்டதாக எண்ணி நிம்மதியாக இருங்கள். கவனக்குறைவால் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.



* ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரு திருமணங்கள் நடத்தலாமா?

க.நாகமுத்து, திண்டுக்கல்.

இரு திருமணங்களை, ஒரே இடத்தில் நடத்த வேண்டிய சூழலில், வேறு வேறு முகூர்த்தத்தில் நடத்தலாம்.

கோயிலில் மற்றவர் ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சேர்க்கலாமா?

த.சிந்தாமணி, வெண்கரும்பூர்.

ஒருவர் ஏற்றிய தீபம் நீண்ட நேரம் எரிய உதவுவதால் புண்ணியம் சேரும்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள் வர முடியாத சூழலில் குலதெய்வத்திற்கு அங்கேயே முடியிறக்கலாமா?

என்.சுந்தரம், பெருங்களத்தூர்

சிரமமான விஷயம் தான்... முதல் முடியை குலதெய்வ சன்னதியில் இறக்குவது தான் சிறப்பு. இயலாத நிலையில் குலதெய்வத்துக்கு காசு முடிந்து வைத்து விட்டு முடியிறக்குங்கள். பின்னர் குல தெய்வத்திற்கு காணிக்கையை செலுத்துங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us