தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : செப் 01, 2017 09:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2017 09:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரியன் மறைந்திருந்தாலும் சூரிய மந்திரம் சொல்லலாமா?

என்.கலாவதி மதுரை.

சொல்லலாம். காலையில் கிழக்கு, மதியம் வடக்கு, மாலையில் மேற்கு நோக்கி நின்று மந்திரம் சொல்லி வழிபடலாம்.

* வீட்டில் பறவைகள் கட்டிய கூட்டை கலைப்பது பாவம் தானே?

பா.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை.

பறவைகள் மற்றும் அணில் கூடு கட்டுவது குஞ்சு பொறித்துக் காப்பதற்காக தான். அதன் கடமை முடிந்ததும் அவை தாமாகவே வெளியேறி விடும். இடைப்பட்ட காலத்தில் கூட்டை கலைப்பது பாவம். கருணை காட்டினால் புண்ணியம்.

பசுவிற்கு மற்ற உயிர்களை விட முக்கியத்துவம் ஏன்?

ஆர்.தமிழ்நிலவு, கம்பம்.

குழந்தை முதல் முதியவர்கள் வரை, எல்லோருக்கும் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத பால் தருவது பசு. தாய்ப்பாலுக்கு ஒப்பானதைத் தருவதால், எல்லோருக்கும் தாய் என்ற நிலையில் கோமாதா என போற்றப் படுகிறது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக வேதங்கள் கூறுகின்றன. இப்படி சிறப்பான விஷயங்களால் மற்ற விலங்குகளை விட முக்கியத்துவம் பெறுகிறது. பசுக்கள் வதை செய்யப்படாமல் காப்பாற்றப் படுகின்றனவோ அங்கே சுபிட்சம் நிலவும்.

சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று சொல்வது ஏன்?

ரா.கீதாஞ்சலி, திருக்கோவிலூர்.

சிவன் தன் ஐந்து முகங்களுடன், ஞானிகளுக்கு தெரியும் ஆறாவது முகமான 'அதோமுகத்துடன்' சேர்ந்து அவதரித்தவர் சுப்பிரமணியர். தீயசக்திகளை அழித்து உலகை காப்பாற்றியவர். முருகனை வழிபட்டால் எல்லா தெய்வங்களுமே அருளுவர் என்பதால், சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்கின்றனர்.

* வளைகாப்பு நடத்த வேண்டியது அவசியம்தானா?

டி.என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

தலைப்பிரசவம் என்பது குடும்பத்தின் வாரிசை தரும் விஷயம். ஒருபெண்ணின் மறுஜென்மம் என்றும் கூறலாம். எனவே தாயும் சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பை அவசியம் நடத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us