sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : பிப் 23, 2018 04:02 PM

Google News

ADDED : பிப் 23, 2018 04:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்த நிறக்கயிறு கட்டுவது நல்லது?

சி.சரண்யா, சென்னை

ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிவப்பு அல்லது கறுப்பு நிறக்கயிறு வழக்கத்தில் இருக்கும். அதை அரைஞாண் கயிறாக உபயோகிப்பர். இது தவிர, பெரியவர்கள் ஜபம் செய்து கொடுப்பதை முடிக்கயிறு என்பர். இதை கையில் கட்டுவது நல்லது.

வெள்ளெருக்கு விநாயகரின் மகத்துவம் என்ன?

ஜி.ரேவதி, புதுப்பாளையம்

தெய்வீகம் மிக்க எருக்கம்பூ சிவன், சூரியனுக்கு உரியது. இது நீலம், வெள்ளை நிறத்தில் வளரும். இதில் வெள்ளெருக்கு அபூர்வமானது. இந்த செடி, மரமாக வளர்ந்து, பின் இயற்கையாக காய்ந்து போன பிறகு அதன் வேரில் விநாயகர் சிலை செய்வர். இது மந்திரத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்.

சிலர் சாப்பிடும் முன் 'நீரால் சுற்றுதல்' செய்கிறார்களே...ஏன்?

எஸ்.வனிதா, ஆதம்பாக்கம்

சுவாமிக்கு முன் நிவேதனம் வைத்து நீரால் சுற்றுவது போல, நாம் சாப்பிடும் முன் உணவை, உயிராக விளங்கும் கடவுளுக்கு நிவேதனம் செய்வது 'பரிசேஷனம்'. இதனால் திருஷ்டி நீங்கும் என்பர்.

* பெண்கள் காலில் தங்கக்கொலுசு அணியலாமா?

வெ.காளீஸ்வரி, மதுரை

காலில் தங்கம் போடுவது கூடாது என்பது தர்மம். முன்பு ராஜாக்கள் தங்கப்பாதுகை, ராணிகள் தங்கக்கொலுசு அணிவது வழக்கில் இருந்தது. நீங்களே முடிவு செய்வது நல்லது.



கோயிலில் எங்கு அமர்ந்து தியானம் செய்யலாம்?

ஜி.குப்புசாமி, வடபழனி

கோயில் முழுதும் புனிதமானது. மனம் விரும்பிய இடத்தில் தியானம் செய்யலாம். சில கோயில்களில் இதற்கு தனி மண்டபம் இருக்கும். எல்லா கோயில்களிலும் சில தனி இடம் இருந்தால் நல்லது.

* என்னிடம் உள்ள சுவாமி படங்களை மற்றவருக்கு கொடுக்கலாமா?

டி.கல்யாணராமன், மதுக்கரை

நல்ல முறையில் பூஜை செய்பவர்களாக இருந்தால் கொடுக்கலாம்.






      Dinamalar
      Follow us