தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : மே 25, 2018 04:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2018 04:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நல்லவர்களுக்கு சோதனை வருவது ஏன்?

அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்

தங்கத்தை நெருப்பிலிட்டு பளபளக்கச் செய்வர். நல்லவர்களையும் சோதனை என்னும் நெருப்பில் இட்டு பக்குவப்படுத்துகிறார் கடவுள்.

* குளிகை நேரத்தில் சுபவிஷயத்தைச் செய்யலாமா?

சி.பி.சிவலிங்கம், கோவை

ராகுகாலம், எமகண்ட நேரத்தை சுபவிஷயங்களுக்கு தவிர்க்கவும். இறுதிச்சடங்குகள் மட்டும் குளிகை நேரத்தில் செய்வது கூடாது.

* பெற்றோர் இருக்கும் போது உதவாத பிள்ளைகள், இறந்த பின் திதி கொடுக்கலாமா?

என்.கந்தசாமி, மதுரை

பெற்றோரை கவனிக்காமல் இருந்தது பாவமே. ஆனாலும் திதி கொடுக்காமல் இருந்தால் அந்தப் பாவம் சந்ததியையும் பாதிக்கும்.

தேய்பிறை அஷ்டமியில் புதிய முயற்சியில் ஈடுபடலாமா?

கே.கே.அக் ஷய், விழுப்புரம்

கூடாது. நல்ல நாள் பார்த்து புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது நல்லது.

வீட்டில் சுவாமிக்கு தினமும் நைவேத்யம் செய்ய வேண்டுமா?

எஸ்.ஸ்ரீராமன், கூடுவாஞ்சேரி

நைவேத்யம் என்பதற்கு 'பக்தியுடன் சுவாமிக்கு அர்ப்பணிப்பது' என்பது பொருள். தினமும் நாம் சாப்பிடுவது போல சுவாமிக்கும் நைவேத்யம் செய்வது கட்டாயம்.

பிரதமை திதியில் சுபநிகழ்ச்சி செய்வதில்லையே....?

ஆர்.கல்பனா, கீழடி, சிவகங்கை

அமாவாசை, பிரதமை, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஏனெனில் இந்நாட்களில் நல்ல தேவதைகள் சக்தி குன்றியிருப்பர்.

பவுர்ணமியன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஏன்?

ஜி.ஜானகி, திண்டிவனம்

புண்ணிய காலங்களில் சிறந்தது பவுர்ணமி. இந்நாளில் சிவனுக்கு செய்யும் அபிஷேகம் குறித்து ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோயில்களில் அபிஷேகம் நடத்துகின்றனர்.

வீட்டில் தீபம், கோயிலில் தீபம் இதில் எது சிறந்தது?

எஸ்.சிவசித்ரா, சென்னை

வீடு, கோயில் இரண்டும் கடவுளின் இருப்பிடமே. இரண்டிலும் தீபம் ஏற்றுவதால் வீடும், நாடும் நலமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us