sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : அக் 21, 2018 07:50 AM

Google News

ADDED : அக் 21, 2018 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல மனைவி அமைய யாரை வழிபட வேண்டும்?

என் மதியழகன், பெண்ணாடம்

பத்னீம் மனோரமாம் தேஹி மனோவிருத்தாநு ஸாரினீம்!

தாரிணீம் துக்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்!!

இந்த ஸ்லோகத்தை துர்க்கை சன்னதியில் தினமும் ஜபிக்க திருமணயோகம் கைகூடும். குணவதியான மனைவி அமைவாள்.

* மணமான பெண்ணுக்கு தாலி பிரித்துக்கட்டும் சடங்கு அவசியமா...ஏன்?

லாவண்யா, மாடம்பாக்கம்

ஆம். சுமங்கலியாக வாழச்செய்யும் பாரம்பரிய சடங்கு இது. திருமணம் முடிந்த மூன்று அல்லது ஐந்தாம் மாதத்தில் நல்ல நாளில் நடத்தலாம்.

உப்பு கரிக்கும் கடல்நீர் புனிதமாவது எப்படி?

ஏ.ராஜேந்திரன், கோவை

கசப்பான வேம்பை மாரியம்மனாக வழிபடுவது போலவே. உலகின் தண்ணீர்த்தேவையை கடலே பூர்த்தி செய்கிறது. குடிநீர், விவசாயத்திற்கு மழை தருவதும் அதுவே. முத்து, பவழம் என ரத்தினங்களை வழங்குகிறது. கடல்வாழ் உயிர்கள், மீனவர்களுக்கு தாயாக இருப்பதால் 'கடலம்மா' என அழைக்கின்றனர். எல்லா நதிகளும் சங்கமிக்கும் கடலில் நீராட பாவம் தீரும். கடவுளின் வடிவமான கடலைக் காப்பது நம் கடமை.

கஜபூஜை என்பது என்ன, அதன் நோக்கம் என்ன?

என்.ஜே.ரவி விக்னேஷ் திருப்பூர்

எல்லா உயிர்களுக்கும் பொதுவானது உலகம் என்பதை போதிப்பது நம் மதம். இதை உணர்த்தவே கடவுளை இவற்றின் வடிவாக வழிபடுகிறோம். ஆண் யானையை விநாயகராகவும், பெண் யானையை கஜ லட்சுமியாகவும் கருதி பூஜை நடத்துவர். இதை தரிசித்தால் வறுமை, நோய், கவலை தீரும். சுபவிஷயம் நிறைவேறும்.

மோட்சத்தில் படிநிலைகள் இருப்பதாக சொல்கிறார்களே....

எம்.விஜயலட்சுமி, சென்னை

மோட்சம் என்றால் 'விடுதலை' என பொருள். உலகம் நிலையற்றது என்பதை உணர்ந்த உயிர்கள், கடவுளின் உலகை அடைகின்றன. உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்ப நான்கு நிலைகள் உள்ளன. அவை... கடவுளின் உலகில் வாழும் பேறு பெறுதல் - சாலோகம்; கடவுளின் அருகில் இருத்தல் - சாமீபம்; தெய்வ வடிவத்தை அடைதல் - சாரூபம்; கடவுளுடன் ஐக்கியமாதல் - சாயுஜ்யம். நான்காம் நிலை 'அழியாத பேரின்பம்'.

திருவிழா முடிவில் தீர்த்தவாரி நடத்துவது ஏன்?

க.நாகமுத்து, திண்டுக்கல்

தானே வலிந்து அடியவர்களை நாடி கடவுள் செல்லும் அற்புத நிகழ்ச்சியே திருவிழா. இதன் முடிவில் தீர்த்தவாரி நடத்துவர். மனம், மொழி, மெய்களால் ஏற்படும் தீமைகளை போக்கி நல்லறிவு புகட்டுவதே தீர்த்தவாரி. இதனால் எண்ணம், சொல், செயல் புனிதம் பெறும்.






      Dinamalar
      Follow us