தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : பிப் 15, 2019 11:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2019 11:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காசி யாத்திரை செல்வதன் நோக்கம் என்ன?

பி.மகாலிங்கம், சென்னை

ஒளிவடிவில் சிவன் தோன்றிய புண்ணியபூமி காசி. இங்கு 'உத்தரவாகினி' என்னும் பெயரில் விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கங்கை பாய்வது சிறப்பு. வாருண், அஸி என்னும் நதிகள் சங்கமிப்பதால் 'வாரணாசி' என்றும் காசிக்கு பெயருண்டு. தேவதைகள், தேவர்கள், முனிவர்கள் எனப் பலர் நீராடிய படித்துறைகள் 64 தீர்த்தக்கட்டங்களாக இங்குள்ளன. கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்தால் வாழ்வு முழுமை பெறும்.

தெய்வங்களுக்கு திதி மற்றும் நட்சத்திரப்படி ஜெயந்தி கொண்டாடுவது ஏன்?

எஸ்.சித்ரா, பரங்கிப்பேட்டை

ஜெயந்தி என்பது பிறந்த நாள். பிறப்பு, இறப்பு அற்றவர் கடவுள். உயிர்கள் மீதுள்ள அன்பால் அவதாரம் நிகழ்த்துகிறார். திதி, நட்சத்திரத்தை சிறப்பிக்கும் விதமாக ஜெயந்தியன்று வழிபாடு நடக்கிறது. உதாரணமாக திதி அடிப்படையில் ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, நட்சத்திர அடிப்படையில் வைகாசி விசாகம், ஆவணி ஓணம்.

பிரிந்த தம்பதி சேர என்ன பரிகாரம் செய்யலாம்?

ஆர்.கே.செல்வராஜ், திருப்பூர்

பிரிவு என்பது தற்காலிகமானது. இந்த அனுபவம் தெய்வங்களுக்கும் உண்டு. சிவனைப் பிரிந்த பார்வதி மதுரையில் தடாதகைப்பிராட்டியாக அவதரித்து, சிவனை மணந்து மீனாட்சியாக அருள்கிறாள். திருமாலைப் பிரிந்த மகாலட்சுமி திருமருகல் என்னும் தலத்தில் தோன்றி மீண்டும் இணைந்தாள். ஆயிரம் காலத்துப் பயிரான திருமண பந்தம் விவாகரத்து என்னும் பாவத்தால் சீர்குலைவது கூடாது. மதுரை மீனாட்சியை வழிபட்டால் பிரிந்தவர்கள் சேர்வர்.

* கோயில்களில் ஆகம விதியைப் பின்பற்றுவது அவசியமா?

சொ.காளிதாசன், பண்ருட்டி

சாலை விதிகளை பின்பற்றுவது நம் நலனுக்குத் தான்! கட்டுப்பாடும், ஒழுங்குமுறையும் வாழ்வின் அடிப்படைகள். கோயில் வழிபாட்டிற்காக கடவுளால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆகமம். இதனடிப்படையில் வழிபட்டால் கடவுளின் அருளை எளிதாக அடையலாம். பாடசாலைகளில் குருகுலவாசமாக வேதம் படிப்பவர்கள், ஆகம மரபை காக்கின்றனர்.

பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்கிறார்களே...

ந.சேதுரத்தினம், செங்கல்பட்டு.

சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வதற்கு இது மட்டும் காரணமல்ல. கடவுள் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வர். யார் பெயருக்கு செய்தாலும், பக்தி இருந்தால் மட்டுமே அருள் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us