தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : பிப் 22, 2019 03:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2019 03:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 மகாசிவராத்திரிக்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு?

கே.எம்.கருப்பையா, மதுரை

தொடர்பு கிடையாது. மகாசிவராத்திரியன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்ற வழக்கத்தை குடும்ப பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

அறுவைசிகிச்சை செய்ய இருப்போர் யாரை வழிபடலாம்?

பொன்.குமாரவேல், ராஜபாளையம்

சரபேஸ்வரரை மனதில் நினைத்து வழிபடுங்கள். முடிந்தால் ஞாயிறன்று மாலை 4:30 - 6:00 மணிக்குள் ராகுகாலத்தில் வழிபடுங்கள். இவருக்கு தஞ்சை மாவட்டம் திருபுவனம், கடலுார் மாவட்டம் சிதம்பரம் கோயில்களில் தனியாக சன்னதி உள்ளது.

நந்திக்கும், அதிகார நந்திக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஜே.ஆர்.குணவதி, பரமக்குடி

நந்தி என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்' என்பது பொருள். சிவனின் வாகனமான ரிஷப தேவரே நந்தி எனப்படுகிறார். கயிலாயத்தின் வாயில்காவலராக இருப்பவர் அதிகார நந்தி.

* எண்கணித முறையில் பலர் பொருள் புரியாமல் பெயர் வைப்பது சரியா?

எஸ்.திருமலை, கோவை

பிறந்த நட்சத்திரத்திற்குப் பொருத்தமான எழுத்தில் பெயரிடுவது நம் கலாசாரம். பிறந்த தேதி, மாதம், ஆண்டைக் கணக்கிட்டு பெயரிடுவது எண் கணிதம். எதுவாக இருந்தாலும் பொருள் புரியும்படி கடவுளின் திருநாமங்களை வைப்பதே சரி.

* புதுமனை புகுவிழா நடத்த ஏற்ற மாதம், கிழமை என்னென்ன?

ஸ்ரீதேவி சுபாஷினி, சென்னை

வைகாசி, ஆவணி, தை, மாசி மாதங்களில் நடத்தலாம். சித்திரை, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் மத்திம பலன் தரும். இதில் சனி, செவ்வாய் தவிர மற்ற கிழமைகளில் புதுமனையில் குடியேறலாம்.

திருவண்ணாமலையில் கிரிவலம் இருமுறை சென்றேன். சிலர் மூன்றுமுறை செல்லச் சொல்கிறார்களே....

ஆர்.பிரியா, கோவை

இத்தனை முறை கிரிவலம் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us