sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஆக 12, 2019 09:40 AM

Google News

ADDED : ஆக 12, 2019 09:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மக்கள் நன்றாக வாழ என்ன செய்ய வேண்டும்?

ம.சரஸ்வதி, நெசப்பாக்கம்

கோயிலில் பூஜைகள் சரிவர நடக்காவிட்டால், மழை குறைந்து நாட்டில் தீமை பெருகும். தர்ம வழியில் மக்கள் வாழ்ந்தால் மழை பெய்யும். நாடும் நன்றாக இருக்கும்.

* கேதார கவுரி விரதம் பற்றி சொல்லுங்களேன்...

பி.சுமன், மானாமதுரை

இமயமலையில் உள்ள 'கேதார் நாத்' என்னும் இடத்தில், அம்பிகை விரதம் இருந்து சிவனுடன் இணைந்தாள். இதை 'கேதார கவுரி விரதம்' என்பர். தம்பதியரின் ஒற்றுமைக்கும், சுமங்கலியாக வாழவும் ஐப்பசி அமாவாசைக்கு 21 நாட்களுக்கு முன்பு பெண்கள் விரதம் இருப்பர்.

* மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதா?

கே.நியாஸ், கடலுார்

நம் முன்னோர்கள் அன்றாட கடமைகளை செய்வதற்கு நேரத்தை ஒதுக்கி உள்ளனர். இதில் தவறு நடந்தால் எதிர்மறை பலன் உண்டாகும். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றும் போது (மாலை 5:30 - 6:00 மணிக்குள்) சாப்பிட, துாங்க கூடாது.

தில ஹோமம் என்றால் என்ன?

அ.யாழினி, சென்னை

முன்னோருக்கு தர்ப்பணம், திதி செய்யாவிட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு, நிம்மதியின்மை ஏற்படும். இதை பிதுர் தோஷம் என்பர். இதிலிருந்து விடுபட எள்ளினால் செய்யப்படும் யாகமே 'தில ஹோமம்'.

அருவுருவ வழிபாடு என்றால் என்ன?

சிவசுப்பிரமணியன், சிதம்பரம்

உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வடிவங்களில் சிவன் அருள்புரிகிறார்.

* உருவம் என்பது மனித வடிவில் இருப்பது. அதாவது நடராஜர், பைரவர்

* அருவம் என்பது கண்ணுக்குத் தெரியாத நிலை. அதாவது உருவம் அற்ற நிலை.

* அருவுருவம் என்பது உருவமும், அருவமும் கலந்தது. அதாவது சிவலிங்கம்.

எல்லா உயிர்களுக்கும் கிரகங்களின் தாக்கம் உண்டா?

எல்.கஸ்துாரி, அம்பத்துார்

மனிதனைப் போலவே எல்லா உயிர்களுக்கும் பாவ, புண்ணியங்களின் பாதிப்பு உண்டு. இதை வழங்கும் அதிகாரம் நவக்கிரகங்களுக்கு உண்டு.

சந்தனம், குங்குமத்தை கழுத்தில் இடலாமா?

ஜி.குப்புசாமி, சென்னை

நெற்றி, கழுத்து, மார்பில் குங்குமம் வைக்கலாம். கழுத்தில் வைப்பதை 'மங்கல கழுத்து' என்பர். மதுரையை ஆண்ட மன்னர் கூன்பாண்டியனின் மனைவி மங்கையற்கரசி தனது மார்பில் திருநீறு, குங்குமம் பூசியது தேவாரத்தில் உள்ளது.

* சரணாகதி என்பதன் பொருள் என்ன?

டி.ரவிக்குமார், பொள்ளாச்சி.

ஸரண் + ஆகதி = ஸரணாகதி. 'ஸரணம்' என்றால் அடைக்கலம். 'ஆகதி' என்றால் அடைதல். பாவம் அகலவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் கடவுளிடம் அடைக்கலம் புகுவது என்பது இதன் பொருள். சரணடைந்தவரை காப்பது கடவுளின் பொறுப்பு.






      Dinamalar
      Follow us