ADDED : ஆக 07, 2019 08:36 AM

தேவையான பொருட்கள்
பச்சரிசி - ஒரு கப்
தேங்காய்ப் பால் - 2 கப்
நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீவிய வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய்த் துாள் - ஒரு சிட்டிகை
முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி நைஸாக, கெட்டியாக அரைத்து வாழை இலையில் வைத்து சுருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும். இட்லி அவிக்கும் சட்டியில் வேக வைப்பது நல்லது. வெந்ததும் துண்டுகளாக வெட்டவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி, திராட்சை, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகளை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள நெய்யை ஊற்றி, துண்டுகளாக்கிய அடையைப் போட்டு வதக்கி தேங்காய்ப் பால் ஊற்றி வேக விடவும். வெந்ததும் சீவிய வெல்லம் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த்துாள், வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்த் துண்டுகள் சேர்த்து இறக்கவும். குருவாயூர் கிருஷ்ணருக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது.