sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஆக 26, 2019 09:07 AM

Google News

ADDED : ஆக 26, 2019 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நிலப்பிரச்னை தீர எளிய வழி?

ஜே.ஆர்.ராஜாராம், பரமக்குடி

பூமிக்கு உரியவர் எனப்படும் செவ்வாயின் அதிதேவதை முருகப் பெருமான். அவருக்கு செவ்வாய்க்கிழமையில் பால் அபிஷேகம் செய்யுங்கள். நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்க, பழனி முருகனை தரிசிப்பது நல்லது.

* பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று விரதமிருக்கலாமா?

ப.ஸ்ரீதேவி, சென்னை

எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்ற கிழமை வெள்ளி. இந்நாளில் கார்த்திகை, ஏகாதசி, பிரதோஷம் விரதங்கள் வந்தாலும், எண்ணெய் தேய்த்து குளித்த பின் விரதமிருக்கலாம்.

* வியாபாரம் செய்யும் இடத்தில் அடிக்கடி ஹோமம் நடத்தலாமா?

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்

நிறுவனத்தில் விநாயகர் கோயில் இருந்தால் தினமும் பூஜையும், ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமமும் நடத்தலாம்.

* ராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்?

சி.பி.சிவலிங்கம், கோவை

நவக்கிரகங்களில் சுபகிரகம், பாவகிரகம் என இரு பிரிவு உண்டு. சூரியன், சந்திரன், புதன், வியாழன், வெள்ளி - சுபகிரகங்கள். செவ்வாய், சனி, ராகு, கேது - பாவ கிரகங்கள். இதில் ராகு, கேதுவுக்கு மட்டும் கிழமை கிடையாது. தினமும் ஒன்றரை மணிநேரம் ராகுவுக்குரிய ராகு காலமும், கேதுவுக்குரிய எமகண்டமும் வரும். இந்த நேரத்தில் சுப நிகழ்ச்சியை நடத்த கூடாது.

குடும்பத்தில் குழந்தைகள் இறந்தே பிறப்பதற்கு பரிகாரம் உண்டா?

கே.வனிதா, கள்ளக்குறிச்சி

பித்ரு தோஷம் இருந்தால் இது ஏற்படும். ராமேஸ்வரத்தில் 'தில ஹோமம்' செய்யுங்கள். பின் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகைக்கு அர்ச்சனை செய்து, அங்கு கொடுக்கும் எண்ணெய்யை உபயோகியுங்கள். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கொண்ட நல்ல குழந்தைகள் பிறப்பர்.

திருப்பதியை தரிசிக்கும் பெண்கள் சூடிய பூக்களை களைவது ஏன்?

பி.சங்கீதா, கோவில்பாளையம்

இது போல் செய்வது சாஸ்திர ரீதியாக சரியானது அல்ல.






      Dinamalar
      Follow us