sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : செப் 13, 2019 10:23 AM

Google News

ADDED : செப் 13, 2019 10:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காஞ்சிப்பெரியவர் போன்ற மகான்களை வழிபடலாமா?

ஆர்.சாய் தீப், சென்னை

தாராளமாக! காஞ்சிப்பெரியவர் போன்ற ஞானிகள் கடவுள் அருளால் பூமியில் அவதரிக்கின்றனர். இவர்களால் இந்து தர்மம் தழைக்கிறது.

* விளக்கேற்றும் போது என்ன ஸ்லோகம் சொல்லலாம்?

டி.தாஷ்விகா, மதுரை

சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்!

மம காரிய ஸம்ருத்யர்ததம் தீபஜோதி நமோஸ்துதே!!

இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். நீண்ட ஆயுள், உடல் நலம், லட்சுமி கடாட்சம், முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

* காதல் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் அவசியமா...

எம்.சந்திரேஷ், புதுச்சேரி

மனப் பொருத்தம் இருந்தாலே போதுமானது.ஆனாலும் பெற்றோர் ஆசியுடன் மணவாழ்வை தொடங்குவது நல்லது.

* தேய்பிறையில் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

எஸ்.தேஜஸ், ஊட்டி

தேய்பிறையில் சப்தமி திதி வரை நடத்தலாம். பின்னர் தேய்பிறையின் ஆதிக்கம் அதிகமாவதால் அஷ்டமி முதல் அமாவாசை வரை தவிர்ப்பது நல்லது.

மாலை நேரத்தில் துளசி இலையை பறிக்கலாமா?

என்.தான்வி, திருவள்ளூர்

விளக்கேற்றும் நேரத்திற்கு (மாலை 5:30 - 6:00 மணி) முன்னதாக பூக்களை பறிப்பது நல்லது. துளசி, வில்வத்தை விளக்கேற்றிய பின் பறிக்க கூடாது.

பிரபஞ்சம் என்றால் என்ன?

எஸ்.யஷ்வின், பொள்ளாச்சி

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் சேர்ந்தது பிரபஞ்சம். இந்த பஞ்ச பூதங்களின் வடிவமாக சிவபெருமான் ஐந்து தலங்களில் அருள்கிறார்.

* நிலம் - காஞ்சிபுரம் அல்லது திருவாரூர்

* நீர் - திருவானைக்காவல்

* தீ - திருவண்ணாமலை

* காற்று - திருக்காளத்தி

* ஆகாயம் - சிதம்பரம்.

இயற்கையை இறைவனாக கருதி பாதுகாப்பது நம் கடமை.

அத்தி மரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு?

ஆர். ரக் ஷன், கோவை

புனிதமான மரங்களில் அத்தியும் ஒன்று. சுவாமி சிலை செய்ய, யாகத்திற்கு மரக்குச்சியாக அத்தி பயன்படும். சமஸ்கிருதத்தில் 'அவ்தும்பரம்' என சொல்வர். அத்திமரத்தால் ஆன மூலவர் உள்ள கோயில்களை தரிசித்தால் நன்மை கிடைக்கும்.

கோயிலில் விழுந்து கும்பிடுவது கட்டாயமா?

கே.அவந்திகா, கடலுார்

ஆம். இதை 'சாஷ்டாங்க நமஸ்காரம்' என சொல்வர். ''என்னால் ஆவது ஒன்றுமில்லை; எல்லாம் உன் செயலே' எனக் கடவுளை சரணடைவதே இதன் நோக்கம்.

எந்த திசை நோக்கி மருந்தை உண்ண வேண்டும்?

ஜே.ஆர். ராஜாராம், பரமக்குடி

குழப்பம் வேண்டாம். மருத்துவர் கூறும் அறிவுரைப்படி நேரத்திற்கு சத்தான உணவு, மருந்து சாப்பிட்டு வர நோய் தீரும். மற்ற படி மருந்து சாப்பிடும் திசை பற்றி யோசிக்காமல் இருந்தாலே நிம்மதியாக இருக்கலாம்.

விமானம், கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றுவது ஏன்?

சி.அகிலன், தேனி

விமானம், கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றுவதன் மூலம் தெய்வ சக்தி கோயிலுக்கு வரவழைக்கப்படுகிறது. இதனால் கருவறையின் சக்தி அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us