sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : டிச 20, 2019 03:12 PM

Google News

ADDED : டிச 20, 2019 03:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஏழரைச்சனியின் தாக்கம் குறைய என்ன செய்யலாம்?

எஸ்.ரனிஷாஸ்ரீ, சிதம்பரம்

நள மகாராஜாவுக்கு சனிதோஷம் போக்கிய திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசிப்பது நல்லது. உங்கள் ஊரிலுள்ள சிவன் கோயிலில் ருத்ராபிஷேகம் செய்து வழிபட ஏழரைச்சனியின் தாக்கம் குறையும். சாதாரண அபிஷேகமும் செய்யலாம். சனிக்கிழமையில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபட்டாலும் நன்மையே.

இறப்பு வீட்டுக்குப் போய் வந்தவுடன் அன்றே திருமணத்திற்குச் செல்லலாமா?

ஆர்.முகஷே், தேனி

கூடாது. இறப்புக்கு செல்ல நேர்ந்தால், மறுநாள் தான் திருமண வீட்டாரைச் சந்திக்கலாம்.

* எல்லா சன்னதிக்கும் போவது அவசியமா?

எம்.துஷ்யந்த், சிவகங்கை

கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிக்கும் தனிச்சிறப்பு உண்டு. முக்கிய சன்னதி என்பது ஜனாதிபதி என உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். குடும்ப அட்டை பெற அவரிடம் செல்லத் தேவையில்லை. நம் ஊர் பிரச்னையை மாவட்ட ஆட்சியர் தீர்த்து விடுவார்! அது போலதான் கோயிலும். ஜனாதிபதியின் ஆணை என்றாலும், தனித்தனி துறைகளாக நிர்வாகம் செயல்படுகிறது. அது போல பிரதான சக்தியின் ஆணையை பெற்று அருள்புரியும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளை தரிசிப்பதே சரியான முறை.

* தலைவாசலில் அமர்ந்து சாப்பிடவோ துாங்கவோ கூடாதாமே...

சி.ரித்திகா, குன்னுார்

கோயிலுக்குச் சமமானது வீடு. அதில் தெய்வீக சக்தியை உள்ளிழுக்கும் தோரண வாயில் போன்றது தலைவாசல். அங்கு மெழுகி கோலமிட்டு விளக்கேற்றினால் தெய்வசக்தியும், லட்சுமி கடாட்சமும் வீட்டுக்குள் வரும். அந்த இடத்தில் துாங்குவது, சாப்பிடுவது கூடாது.

* சண்டிகேஸ்வரரை கைதட்டி வழிபடுவது ஏன்?

டி.மதுமிதா, வளசரவாக்கம்

கை தட்டக் கூடாது. சண்டிகேஸ்வரர் சிவாலய வழிபாட்டு பலனை நமக்குத் தருபவர். தியானத்தில் இருக்கும் இவரை வணங்கினாலே போதும்.

சுமங்கலிப்பெண்கள் ருத்ராட்ச மாலை அணிந்து சிவநாமம் ஜபிக்கலாமா?

கே.கஷேிகா, திருப்பூர்

தாராளமாக ஜபிக்கலாம். பெண்கள் இப்படி செய்தால் குடும்பத்தினர் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழும் பேறு பெறுவர். சுபநிகழ்ச்சிகள் நிறைவேறும்.

ஸ்ரீராம ஜெயம் எழுதிய நோட்டை என்ன செய்யலாம்?

எஸ்.மந்த்ரா, பெங்களூரு

பூஜையறையில் வைத்து வழிபடலாம். ராமநாம வங்கி, அறக்கட்டளை நிறுவனங்களில் ஒப்படைத்தால் அவர்களும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வர். அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்புவது சாலச் சிறந்தது. அனுப்ப வேண்டிய முகவரி

ஸ்ரீராம நாம வங்கி

'ராம மந்திரம்'

2, விநாயகம் தெரு

மேற்கு மாம்பலம்

சென்னை - 600 033

044 - 2489 3736

ராம கேந்திரம்

கோவிந்தாபுரம்

ஆடுதுறை

கும்பகோணம் - 612 101

98942 00365

ஸ்ரீராம நாம வங்கி

10ஏ, சாஸ்திரி ரோடு ராதாகிருஷ்ணா காலனி தென்னுார்,

திருச்சி - 620 017

93441 19555

ராம நாம பிருந்தாவனம்

55, குமுத மலர் தெரு

விஸ்வநாதபுரம்

மதுரை - 625 014

98428 30133






      Dinamalar
      Follow us