sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஏப் 24, 2020 09:29 AM

Google News

ADDED : ஏப் 24, 2020 09:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'கொடுத்து வைத்தவன்' என்பதன் பொருள்?

சி.வசந்த், திருத்தணி

ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்னும் ஐந்தாம் வீடு பலமாக இருப்பதை இப்படி சொல்கிறார்கள். முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பலன் புண்ணியமாகி இந்த பிறவியில் நன்மையை வாரி வழங்கும்.

* சித்தம் போக்கு சிவன் போக்கு என்கிறார்களே?

வி.லட்சுமி, புதுச்சேரி

சித்தர்கள் எண்ணம், சொல், செயலால் 'சிவனே' என பக்தியில் ஆழ்ந்திருப்பர். மனைவி, மக்கள் என்னும் குடும்பப் பிணைப்புக்குள் சிக்காதவர்கள். 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்' என மனதில் பட்டதைச் சொல்லும் துணிவு கொண்டவர்கள். ''உள்ளத்தில் கடவுள் இருக்கும் போது, சிலை வடிவில் அவனைத் தேடுவது அறிவீனம்' என்பது சித்தர்களின் முடிவு.

பரிகார தோஷம் போக்க கோயிலுக்கு போக முடியவில்லை...என்ன செய்யலாம்?

பி.விவேக், திருவள்ளூர்

பல்லவ மன்னர் கட்டிய சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாகி விட்டது. இந்நிலையில் மன்னரின் கனவில் தோன்றி, 'வாயிலார் நாயனார்' என்னும் அடியவர் தன் மனதில் கட்டிய கோயிலுக்கு அதே நாளில் செல்ல வேண்டியுள்ளது' என்று தெரிவித்தார் சிவபெருமான். மானசீகமாக வழிபட்டாலும் பலன் கிடைக்கும் என்பதை காட்டும் சம்பவம் இது. நம்பிக்கையுடன் மனதிற்குள் வேண்டினாலும் தோஷம் நீங்கி நல்லதே நடக்கும்.

சுதர்மம் என்பதன் பொருள் என்ன?

பி.ஆகாஷ், பெங்களூரு

பிறருக்கு நன்மை தரும் செயல்களில் ஈடுபடுவது சுதர்மம். சு - மேலான, தர்மம் - நற்செயல் என்பது பொருள். அதர்மம் என்பதன் எதிர்ச்சொல் சுதர்மம். இது ஒருவருக்கு புண்ணிய பலனைத் தரும்.

* திருப்பதி நேர்த்திக்கடனை உப்பிலியப்பன் கோயிலில் செலுத்தலாமா?

எஸ்.சாரதி, கோவை

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு கும்பகோணம் உப்பிலியப்பன் அண்ணன் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில், திருப்பதிக்கு நேர்ந்த வேண்டுதலை இங்கு செலுத்துவது காலம் காலமாக உள்ளது. 'ஒப்பிலியப்பன்' என்பதே இவரது உண்மை பெயர். 'ஒப்பில்லாத அப்பன்' என்பது பொருள்.

* வளர்பிறை, தேய்பிறை இதில் திருமணம் நடத்த சிறப்பானது எது?

பி.ஸ்வேதா, மதுரை

மனதிற்கு அதிபதியாக இருப்பவர் சந்திரன். வளர்பிறையில் இவர் தன் முழு ஆற்றலுடன் இருப்பதால் நம் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். இதனால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறை சிறப்பு.

மஞ்சள் நிறம் சிறப்புடையதாகக் கருதப்படுவது ஏன்?

கே.ராகவி, திருப்பூர்

மங்களகரமான நிறம் மஞ்சள். வழிபாட்டில் மஞ்சளில் விநாயகர் பிடித்து வழிபடுவதும் இதனால் தான். நவக்கிரகங்களில் பூரண சுபகிரகமான குருவிற்கு உரியது மஞ்சள். குருபலம் இருந்தால் ஒருவரது வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, செல்வ வளம் போன்ற சுபவிஷயங்கள் கிடைக்கும்.

மனம் அமைதி பெற கீதாச்சாரம் படிக்கலாமா?

டி.நந்தினி, கடலுார்

போர்க்களமான குரு க்ஷேத்திரத்தில் அர்ஜூனன் குழப்பத்தில் ஆழ்ந்தான். அப்போது கிருஷ்ணர் உபதேசித்த தத்துவமே பகவத் கீதை. அதன் மூலம் மனத்தெளிவு பெற்ற அவன், போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். தினமும் இதைப் படித்தால் அமைதி மட்டுமின்றி கீதாசாரியன் கண்ணன் அருளும் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us