sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 12, 2020 01:04 PM

Google News

ADDED : ஜூன் 12, 2020 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோயிலுக்கு சேவல் தானம் செய்யலாமா?

டி.கல்யாணி, மதுரை

கொடுக்கலாம். சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்ப நாயனார் வரலாற்றில் சேவல் தானம் இடம்பெற்றுள்ளது. நாயனாரின் தந்தை பிள்ளை வரம் கிடைக்க மலைக்கடவுளான முருகனுக்கு சேவல் கொடுத்ததாக பெரியபுராணம் கூறுகிறது.

* ராம நாமத்தை ஜபிப்பதால் என்ன பலன்?

பி.நளினி, புதுச்சேரி

நாராயணன் எனும் பெயரில் வரும் இரண்டாவது எழுத்து 'ரா'. நமசிவாய என்பதில் வரும் இரண்டாவது எழுத்து 'ம'. இந்த எழுத்துகள் இணைந்து மகாவிஷ்ணு, சிவபெருமானைச் சிந்திக்க வைக்கும் தாரக மந்திரம் 'ராம'. இதை ஜபிப்பவருக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும்.

திருமணத்தடை போக்க பரிகாரம் சொல்லுங்கள்.

வி.ஆனந்தி, விருதுநகர்

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தடைபடுகிறது என்பதையறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்வது நல்லது. பொதுவாக செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபட்டால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

பக்தி, பயபக்தி சரியானது எது?

ஆர்.ரஞ்சனி, திருத்தணி

பக்திக்கு பயம் தேவையில்லை. கோயில் சொத்தைத் திருடுதல், பிறருக்கு தீங்கு செய்தல் போன்ற பாவச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயப்பட வேண்டும்.



* ஆகம விதியைப் பின்பற்றாமல் கோயில் கட்டலாமா?

எஸ்.பிருந்தா, சென்னை

ஆகம விதிகளை பின்பற்றி கோயில் கட்டுவது தான் சரியான முறை. பெரியளவில் செலவழித்துக் கோயில் கட்ட பணம், வாய்ப்பு இல்லாவிட்டால் சாதாரண கூரை வேய்ந்து கூட வழிபாடு நடத்தலாம். பக்தி என்னும் அன்பு உணர்வு இருந்தால் போதும். கடவுள் அங்கு எழுந்தருளி அருள்புரிவார்.

* நேர்த்திக்கடனை எத்தனை நாட்களுக்குள் செலுத்த வேண்டும்?

சி.ஆகாஷ்,திருப்பூர்

கால வரையறை இதற்கில்லை. எதிர்பார்ப்பு நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக பிரார்த்திக்கிறோம். ஆனால் பின்னர் எப்போது செலுத்தினால் என்ன என்று தாமதப்படுத்த தேவையில்லை. தெய்வ குற்றம் என்னும் பாவம் சேராமல் நேர்த்திக்கடனை செலுத்துவது நல்லது.

கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் தொடர்புண்டா?

எல்.பிரபு, கள்ளக்குறிச்சி

பிரபஞ்சம் என்பது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் சேர்ந்த இந்த உலகத்தைக் குறிக்கும். உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை இப்பிரபஞ்சத்தில் தான் கடவுள் படைத்திருக்கிறார். அதனடிப்படையில் சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்களாக நிலம் - காஞ்சிபுரம் அல்லது திருவாரூர், நீர் - திருவானைக்கா, தீ - திருவண்ணாமலை, காற்று - காளஹஸ்தி, வானம் - சிதம்பரம் ஆகியவை உள்ளன.






      Dinamalar
      Follow us