sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூன் 30, 2020 09:57 AM

Google News

ADDED : ஜூன் 30, 2020 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் வேல், வம்புரிச்சங்கு வைத்து வழிபடலாமா?

கே.பிரகதி, கடலுார்


அரை அடிக்கு மிகாமல் வெள்ளி, பித்தளையால் ஆன வேல், சிறிய வலம்புரிச்சங்கை வைத்து பூஜிக்கலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பால் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம், மலர் சாத்தி வழிபாடு செய்யுங்கள்.

உழவாரப்பணி என்றால் என்ன?

சி.முகுந்தன், கோவை


இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர் திருநாவுக்கரசர். கோயில் நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன. நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்.

* பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறுமா?

சி.ஹாசினி, திருப்பூர்


பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4:30 - 6:00 மணிக்குள் நீராடி கடவுளை வழிபட்டால் பன்மடங்கு பலன் கிடைக்கும். மேலும் நாம் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய கடமைகளைச் சரிவரச் செய்தால் விருப்பம் தானாக நிறைவேறும்.

* வீணையை பூஜையறையில் வைக்கலாமா?

பி.அஸ்வதா, மதுரை


இசைக்கருவிகள் எல்லாமே தெய்வீகத்தன்மை கொண்டவை. அதிலும் வீணை சரஸ்வதிக்கு உரியது. சந்தனம், குங்குமம் இட்டு பூஜிப்பதை விட அதை இசைக்கக் கற்றுக் கொண்டு நாத வழிபாடாக செய்தால் இன்னும் நன்மை ஏற்படும்.

* திருஷ்டியை போக்க என்ன செய்யலாம்?

கே.ஹர்ஷ மித்ரன், பெங்களூரு


செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் சாம்பிராணி இடுதல், தேங்காயால் தலையைச் சுற்றி உடைத்தல், வாசலில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தல், கற்றாழை கட்டுதல் ஆகியவற்றில் முடிந்ததைச் செய்யுங்கள்.

* ஒருவரை எரியூட்டிய இடத்தில் நவதானியம் இடுவது ஏன்?

கே.அருண், விழுப்புரம்


நவதானியத்தை விதைத்தால் ஓரிரு நாளில் முளை விடும். அவர் போன இடத்தில் புல் முளைத்து விட்டது' என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். மயானம் கூட பசுமையாக இருக்க வேண்டும் என்பது வாழ்வியல் நோக்கம். மனிதன் மறைந்த பின் அவனது வம்சம் தழைக்க வேண்டும் என்பது ஆன்மிக நோக்கம்.

கோயிலில் தேன்கூடு கட்டினால் நல்லதா...

ஆர்.தியாஸ்ரீ, சென்னை


நல்லது, கெட்டது என இதில் சகுனம் பார்க்கத் தேவையில்லை. தேனீக்கள் மட்டுமின்றி புறா, கிளி, காகம், அணில், குரங்கு என பல உயிர்கள் கோயிலில் இருப்பது இயல்பானது தான். அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நம் கடமை.






      Dinamalar
      Follow us