sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பயமா...போயே போச்சு!

/

பயமா...போயே போச்சு!

பயமா...போயே போச்சு!

பயமா...போயே போச்சு!


ADDED : ஜூன் 19, 2020 07:46 PM

Google News

ADDED : ஜூன் 19, 2020 07:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எதையும் தாங்கும் இதயம் பெற திருவாரூர் தியாகராஜரை நினைத்து பாடுங்கள். சுந்தரர் பாடிய தேவாரம் இது.

இறைகளோடு இசைந்த இன்பம்

இன்பத்தோடு இசைந்த வாழ்வு

பறை கிழித்து அனைய போர்வை

பற்றியான் நோக்கி னேற்குத்

திறைகொணர்ந்து ஈண்டித் தேவர்

செம்பொனும் மணியும் துாவி

அறைகழல் இறைஞ்சும் ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

ஊன்மிசை உதிரக் குப்பை

ஒருபொருள் இலாத மாயம்

மான்மறித்து அனைய நோக்கின்

மடந்தைமார் மதிக்கும் இந்த

மானுடப் பிறவி வாழ்வு

வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்

ஆனல் வெள்ளேற்ற ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

அறுபதும் பத்தும் எட்டும்

ஆறினோடு அஞ்சும் நான்கும்

துறுபறித்து அனைய நோக்கிச்

சொல்லிற்று ஒன்றாகச் சொல்லார்

நறுமலர்ப் பூவும் நீரும்

நாள்தொறும் வணங்குவாருக்கு

அறிவினைக் கொடுக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

சொல்லிடில் எல்லை யில்லை

சுவையிலாப் பேதை வாழ்வு

நல்லதோர் கூரை புக்கு

நலமிக அறிந்தேன் அல்லேன்

மல்லிகை மாட நீடு

மருங்கொடு நெருங்கி எங்கும்

அல்லிவண்டு இயங்கும் ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

நரம்பினோடு எலும்பு கட்டி

நசையினோடு இசைஒன்று இல்லாக்

குரம்பைவாய்க் குடியிருந்து

குலத்தினால் வாழ மாட்டேன்

விரும்பியே கமழும் புன்னை

மாதவித் தொகுதி என்றும்

அரும்புவாய் மலரும் ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

மணமென மகிழ்வர் முன்னே

மக்கள்தாய் தந்தை சுற்றம்

பிணமெனச் சுடுவர் பேர்த்தே

பிறவியை வேண்டேன் நாயேன்

பணையிடைச் சோலை தோறும்

பைம்பொழில் விளாகத்து எங்கள்

அணைவினைக் கொடுக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

தாழ்வெனும் தன்மை விட்டுத்

தனத்தையே மனத்தில் வைத்து

வாழ்வதே கருதித் தொண்டர்

மறுமைக்குஒன்று ஈயகில்லார்

ஆழ்குழிப் பட்ட போது

அலக்கணில் ஒருவர்க்கு ஆவர்

யாழ்முயன்று இருக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

உதிரநீர் இறைச்சிக் குப்பை

எடுத்தது மலக்கு கைம்மேல்

வருவதோர் மாயக் கூரை

வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்

கரியமால் அயனும் தேடிக்

கழலிணைக் காண மாட்டா

அரியனாய் நின்ற ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

பொய்த் தன்மைத் தாய மாயப்

போர்வையை மெய்யென்று எண்ணும்

வித்தகத் தாய வாழ்வு

வேண்டிநான் விரும்பகில்லேன்

முத்தினைத் தொழுது நாளும்

முடிகளால் வணங்குவாருக்கு

அத்தன்மைத்தாகும் ஆரூர்

அப்பனே அஞ்சினேனே.

தஞ்சொலால் அருள் பயக்கும்

தமியனேன் தடமுலைக்கண்

அஞ்சொலார் பயிலும் ஆரூர்

அப்பனை ஊரன் அஞ்சிச்

செஞ்சொலால் நயந்த பாடல்

சிந்தியா ஏத்த வல்லார்

நஞ்சுலாம் கண்டத்து எங்கள்

நாதனை நண்ணுவாரே.






      Dinamalar
      Follow us