ஜூன் 19, ஆனி 5: மாத சிவாராத்திரி, சிதம்பரம், ஆவுடையார் கோவில் சிவன் உற்ஸவம் ஆரம்பம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் திருமஞ்சன சேவை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பவனி
ஜூன் 20, ஆனி 6: அமாவாசை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை, கரி நாள்
ஜூன் 21, ஆனி 7: சிதம்பரம் சிவன் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதிக்கு எதிரில் அனுமன் திருமஞ்சனம், கண்ணுாறு கழிக்க, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நல்ல நாள்
ஜூன் 22, ஆனி 8: சந்திர தரிசனம், சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவர் திருமஞ்சனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் பவனி, அகோபில மடம் 9வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
ஜூன் 23, ஆனி 9: ராமநாதபுரம் கோதண்ட ராமர் உற்ஸவம் ஆரம்பம், பத்ராசலம் ராமர் பவனி, சுவாமி மலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்
ஜூன் 24, ஆனி 10: முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனம், திருக்கோளக் குடி, கண்டதேவி, கானாடு காத்தான் சிவன் உற்ஸவம் ஆரம்பம், பிரதிவாதி பயங்கரம் அண்ணன் திருநட்சத்திரம்
ஜூன் 25, ஆனி 11: மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஊஞ்சல் உற்ஸவம் ஆரம்பம், ராமநாதபுரம் கோதண்டராமர் அனுமன் வாகனம், கானாடு காத்தான் சிவன் பவனி, சுவாமி மலை முருகன் வைரவேல் தரிசனம், மாணிக்கவாசகர் குருபூஜை