ADDED : ஜூன் 19, 2020 07:35 PM

* கடவுளுக்கு செய்யும் அபிஷேகத்தால் பாவம் அனைத்தும் கரையும்.
* விநாயகருக்கு அகத்தி இலையால் அர்ச்சனை செய்தால் துன்பம் தீரும்.
* மரம், செடி, கொடிகளை வெட்டும் போது கர்ப்பிணிகள் பார்க்கவோ, அருகில் இருக்கவோ கூடாது.
* குடும்பத்தில் அனைவரும் அடிக்கடி விரதம் மேற்கொண்டால் மேன்மை பெறலாம்.
* விநாயகருக்கு மருத இலையால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைப்பேறு பாக்கியம் கிடைக்கும்.
* வாக்குவாதத்தை விரும்பாத பெண்கள் வசிக்கும் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.
* வீட்டு வாசலில் தினமும் கோலமிடவேண்டும். பெயிண்ட், ஸ்டிக்கரால் கோலம் இடுவதை தவிர்ப்பது அவசியம்.
* பெண்கள் தாலி கயிற்றில் ஊக்கு, சாவி முதலிய இரும்பு பொருட்களை அணியக் கூடாது.
* பிள்ளையாருக்கு உடைக்கப்பட்ட சிதறு தேங்காய்த்துண்டுகளை குழந்தைகள் சாப்பிடுவது நல்லது.
* சிவனுக்கு தாழம்பூவைக் கொண்டு ஒருபோதும் பூஜிக்கக் கூடாது.
* பசுவின் நெற்றியில் நடுவே சிவனும், பார்வதியும் குடியிருக்கின்றனர்.
* தங்கத்தால் ஆன சிவலிங்கத்தை 'சொர்ண லிங்கம்' என்பர். இதை வழிபட்டால் ராஜபோக வாழ்வு கிடைக்கும்.