
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உம்பர் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத்து உணர்வூறி
இன்பரசத்தே பருகி பலகாலும்
என்றனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத் தணைவோனே
தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர் தமக்கான நிலை பொருளோனே
ஐந்து கரத்தானை முகப் பெருமாளே
பொருள் : ஐந்து கைகளும், யானை முகமும் கொண்ட விநாயகப் பெருமானே! தம்பிக்காக காட்டில் யானையாக வந்தவனே! சிவசக்தியை வலம் வந்து மாங்கனியை பெற்றவனே! தன்னை நாடிய அன்பர்களுக்கு இன்பம் தருபவனே! வேண்டியதை அருளும் கற்பகமே! உன் அருளாகிய இன்பத்தேனை பருகி, வாழ்நாள் முழுவதும் உன் திருவடிகளை வணங்கும் பாக்கியத்தை தர வேண்டும்.