
* சுவாமிக்கு வீட்டில் அபிஷேகம் செய்யலாமா?
டி.அனிருத், தேனி
இஷ்ட தெய்வத்திற்குரிய நாளில் விரதம் இருந்து அபிஷேகம் செய்யலாம். உதாரணமாக விநாயகர் - சங்கடஹர சதுர்த்தி, முருகன் - கார்த்திகை, சஷ்டி விரதம். அபிஷேகம் செய்த பின் நைவேத்யமாக பொங்கல் அல்லது வெள்ளை அன்னம் படைப்பது அவசியம்.
* சாப்பிடும் போது இடதுகையை ஊன்றக் கூடாதாமே... ஏன்?
கே.வர்ஷா, சென்னை
உணவு ஜீரணிப்பதற்காக வயிற்றில் அமிலம் சுரக்கும். இடதுகையைக் கீழே ஊன்றினால் அமிலம் சுரப்பது தடைபட்டு அஜீரணம் ஏற்படலாம். இதை தடுக்கவே இடது கையைக் கீழே ஊன்றி உண்ணுவது பாவம் என முன்னோர்கள் அறிவுறுத்தினர்.
* தினமும் கடவுளுக்கு பூஜை செய்வது ஏன்
டி.அனுஷ்கா, கோவை
அருட்சக்தியான கடவுளே உயிர்களை வழிநடத்துகிறார். அவருக்கு நன்றி சொல்ல பூஜை செய்கிறோம். அவரைச் சரணடைந்த பின் எதிர்காலம் பற்றிய பயம், கவலை, துன்பம், வருத்தம், மனஅழுத்தம் எதுவும் நெருங்காது.
* சிலர் காலையில் மட்டும் பூஜை செய்கிறார்களே... சரியா?
சி.பத்ருஹரி,புதுச்சேரி
இந்த அவசர யுகத்தில் இதை மட்டும் சரியாகச் செய்வதே பெரிய விஷயம். காலையில் பூஜை செய்பவர்கள் மாலையில் விளக்கு மட்டுமாவது ஏற்றலாம்.
குடும்பத்தினருக்கு எந்த நாளில் திருஷ்டி சுற்றலாம்?
வி.அஜய், திண்டிவனம்
செவ்வாய், வெள்ளி, அமாவாசையில் திருஷ்டி சுற்றலாம். சுபவிசஷேம் நிகழ்ந்தாலும், விசஷேத்தில் பங்கேற்று வந்தாலும் திருஷ்டி சுற்றுவது நல்லது.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்றால் என்ன?
எல்.கவுதம்,மதுரை
சிலர் புதிய முயற்சியில் தடைகள் குறுக்கிட்டதும் சோர்வுக்கு ஆளாவர். அப்போது தடைகளை தகர்த்தெறியும் வழிமுறைகளைக் கண்டறிந்து வெற்றி பெறுவதையே 'மனமிருந்தால் மார்க்கம் உண்டு' என ஆன்றோர் கூறியுள்ளனர்.
உண்ணா நோன்பு, பேசா நோன்பு - எது சிறந்தது?
கே.கவுசிக், திருத்தணி
இரண்டும் ஆன்மிக சிந்தனை வளர துணை செய்கின்றன. விரதத்தால் உடலும், மவுனத்தால் மனமும் துாய்மை பெறும்.
பசுவிற்கு தினமும் அகத்திக்கீரை கொடுக்கலாமா?
கே.வினிதா, திருப்பூர்
தினமும் செய்ய வேண்டிய தர்மங்கள் நான்கு.
1. பூஜைக்கு மலர் கொடுத்தல்
2. பசுவுக்கு புல், கீரை அளித்தல்
3. சாப்பிடும் முன் ஏழைக்கு கைப்பிடி அன்னமிடுதல்
4. மற்றவரிடம் இனிமையுடன் பேசுதல் என்கிறார் திருமூலர்.
ஆடியில் அம்மன் அருள்பெற எதை படிக்கலாம்?
எல்.ஷாலினி, மதுரை
அபிராமி அந்தாதி லலிதா சகஸ்ர நாமம்