தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 08, 2021 03:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2021 03:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழைய ஆடைகளை தானம் அளிப்பது தீங்கா?

டி.நிஷா, காயல்பட்டினம்

இல்லை. ஆனாலும் இதற்கு பலன் கிடைக்காது. புத்தாடைகளை தானமாக அளிப்பது நல்லது.

* சிவன் கோயிலில் அம்மன் என்றும் பெருமாள் கோயிலில் தாயார் என்றும் அழைக்கக் காரணம் என்ன?

கே.மித்ரா, கருங்கல்

அம்மன், தாயார் இரண்டுக்கும் பொருள் ஒன்றே! ஒரே பொருளுக்கு வேறு வேறு சொற்களை பயன்படுத்துவது மொழியின் வளத்தைக் காட்டும் நல்ல விஷயம் தானே!

கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்கணுமா?

ஆர்.யாஷிகா, மாமண்டூர்

ஆம். அந்த நேரத்தில் பூஜை, பிதுர் தர்ப்பணம் செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

தமிழ் மாதப்பிறப்பன்று என்ன செய்ய வேண்டும்?

பி.ஜோவிதா, ஒரகடம்

ஒரு வருடத்தில் 96 நாட்கள் புண்ணிய நாட்கள். ஒவ்வொரு தமிழ் முதல் தேதியும்(12 நாள்) இதில் அடங்கும். இந்நாளில் கோயிலுக்குச் செல்வது, முன்னோரை வழிபாடு செய்வது நல்லது.

* தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றலாமா?

எல்.நிதீஷ், பெங்களூரு

கூடாது. எள்ளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெய்யே சிறந்தது.

பிரம்மனால் படைக்கப்படுவது உயிரா... உடம்பா...

எஸ்.மகிழ்தினி, திருப்பாப்புலியூர்

உயிருக்கு அழிவே கிடையாது. பாவம், புண்ணியத்திற்கு ஏற்ப உயிருக்கான உடலைப் படைத்து பூமிக்கு அனுப்புவது பிரம்மனின் பணி.

* பூஜையறையில் எந்த தெய்வங்களின் படங்களை வைக்கலாம்?

வி.ஹாசினி, கீழக்கரை

பூஜையறையில் நிறைய படங்கள் வைப்பதை விட குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் படம் வைப்பது போதுமானது. அதிலும் தினந்தோறும் பூ வைப்பது அவசியம்.

* வெற்றிலையின் மகத்துவத்தைச் சொல்லுங்கள்.

எஸ்.தன்ஷிகா, காங்கேயம்

அம்பிகை தாம்பூல பிரியை என்பதால் வெற்றிலை படைப்பது சிறப்பு. தாம்பூலம் தரித்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இல்லற வாழ்வு இனிதாகும்.

திருவிழாவிற்கு காப்பு கட்டினால் வெளியூர் போகலாமா

பி.அர்ச்சனா, சிவகங்கை

காப்பு கட்டியதும் தேவர்கள், தெய்வங்கள் ஊரில் தங்கியிருப்பர். இந்நிலையில் அவர்களே இங்கு இருக்கும் போது நாமும் இருக்க வேண்டாமா...

கோயில் வாசல்படியை சிலர் மிதிப்பதில்லையே ஏன்?

எஸ்.ஸ்ரீநிதி, புதுச்சேரி

'வாசலை காக்கும் தேவதைகள் அதில் இருப்பதால் அதனை சிலர் மிதிப்பதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us