தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஸ்ரீநாராயணீயம்

ஸ்ரீநாராயணீயம்

ஸ்ரீநாராயணீயம்


ADDED : ஏப் 24, 2021 01:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2021 01:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பத்ராச்வ நாமக இலாவ்ருத பூர்வ வர்ஷே

பத்ரச்ரவோபிர் ருஷிபி: பரிணுாய மானம்!

கல்பாந்த கூட நிகமோத்தரண ப்ரவீணம்

த்யாயாமி தேவ ஹயஷீர்ஷதனும் பவந்தம்!!

குருவாயூரப்பனின் வெவ்வேறு வடிவங்களையும், அதை வழிபடுவோரையும் பற்றி நாராயண பட்டத்ரி இந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.

வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற்கருளி முன் பரிமுகமாய்

இசைகொள் வேதநுாலென்றிவை பயந்தவனே எனக்கருள் புரியே

உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய மாருதம் வீதியின்வாய்

திசையெல்லாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே!

என்று பாசுரத்தில் ஆழ்வார் கூறியுள்ளபடி ஹயக்ரீவ பெருமாளைப் போற்றுகிறார் பட்டத்திரி. சிவபெருமானின் இருப்பிடமான இலாவ்ருதம் என்னும் கைலாயத்திற்கு கிழக்கில் இருப்பது பத்ராச்வம். இங்கு முனிவர்களான பத்ரசிரவஸர்களால் வணங்கப்படுபவர் ஹயக்ரீவப் பெருமாள் என்கிறார். இந்த ஸ்லோகத்தை பாடினால் துன்பம், கவலை மறையும்.

- எல்.ராதிகா, திருச்சி

radhu_g16@yahoo.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us