தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : செப் 10, 2021 08:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2021 08:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* விதியை நம்மால் வெல்ல முடியுமா?

பி.கோமதி, சென்னை

விதியைக் கட்டுப்படுத்த பக்தி உதவும். சத்தியவான் சாவித்ரி, மார்க்கண்டேயர் வரலாறை படித்தால் உண்மை புரியும்.

* தமிழ் மாதப் பிறப்பிற்கும், சூரியனுக்கும் என்ன தொடர்பு?

எல். காவ்யா, புதுச்சேரி

சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகும் நாளே தமிழ் மாதப்பிறப்பு. இதில் சித்திரை, ஆடி, தை மாதப் பிறப்புகளை சித்திரை விஷு, தட்சிணாயன, உத்ராயண புண்ணிய காலம் எனக் கொண்டாடுகிறோம்.

* பிரேதம் போகும் போது கடுகு துாவுகிறார்களே... சரியா...

ஆர்.ரம்யா, திருப்பூர்

நடைமுறையில் பொரி, உதிரிப்பூக்களை துாவும் வழக்கம் உள்ளது. நீங்கள் சொல்வது போல சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லா இடங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.

* செவ்வாய், சனிக்கிழமைகளில் முகூர்த்தம் வருவதில்லையே...ஏன்

எம்.ராஜாராம், தேனி

நவக்கிரகங்களில் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவை பாவ கிரகங்கள். எனவே செவ்வாய், சனிக்கிழமைகளிலும், ராகுவுக்கு உரிய ராகு காலம், கேதுக்குரிய எமகண்டத்திலும் முகூர்த்தம் வராது.

தாமரைத் தண்டில் திரியிட்டு வீட்டில் விளக்கேற்றலாமா...

மெய். முருகப்பா, காரைக்குடி

திரிகளில் தாமரைத்தண்டு சிறப்பானது. இதில் விளக்கேற்றினால் கடன், வறுமை, முன்வினை பாவம் தீரும்.

பழநி முருகனை ராஜ அலங்காரம் அல்லது ஆண்டிக்கோலம் எதில் தரிசிப்பது நல்லது?

வி.ராஜேஷ், விழுப்புரம்

எதில் தரிசித்தாலும் பலன் ஒன்றே.

அம்மனுக்குரிய மாவிளக்கை சிலர் முருகனுக்கும் ஏற்றுகிறார்களே...

பி.கேதார், மதுரை

ஏற்றலாம். குலதெய்வமாக முருகனைக் கொண்டவர்கள் இப்படி செய்வது வழக்கம்.

மறுபிறவியில் நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும்?

எம்.கவுசிகா, குளச்சல்

இப்பிறவியில் நல்ல செயல்களை மட்டும் செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us