தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 11, 2021 02:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2021 02:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.சி.ராஜேஷ், சென்னை

*பசுதானம் செய்தால் பாவம் தீருமா?

வம் தீரும். பசுதானம் செய்வதால் நீண்ட காலம் வாழ்வீர்கள்.

பி.கனகாம்பிகை, அவினாசி

*பக்தர்கள் இன்றி கோயில்களில் திருவிழா நடத்துவது சரியா?

கடந்த ஆண்டு கொரோனாவால் கோயில்களில் திருவிழா நடத்தவில்லை. பக்தர்கள் இல்லாவிட்டாலும் கூட திருவிழா நடக்கிறதே என திருப்தி கொள்ளுங்கள்.

வி.மணிமேகலை, கள்ளக்குறிச்சி

*தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாமா?

படிக்கலாம். நீண்ட ஆயுள், உடல்நலம், செல்வம் சேரும்.

கே.கோவிந்தன், திருநெல்வேலி

*பக்கத்து வீட்டில் இறப்பு நிகழ்ந்திருக்கும் போது விரதமிருக்கலாமா?

முதலில் துக்கத்தை விசாரித்து உதவிகளைச் செய்யுங்கள். பின்னர் தலைக்கு குளித்து விட்டு விரதமிருங்கள்.

எம்.மைதிலி, சிவகங்கை

*யாகசாலையில் எடுத்த நாணயங்களை என்ன செய்யலாம்?

பூஜையறை அல்லது பணப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருங்கள். செல்வம் பெருகும்.

பி.விஷ்ணுபிரியா, துாத்துக்குடி

*கடவுளின் திருவடி, திருமுடி எதை முதலில் வணங்க வேண்டும்?

முதலில் திருவடியை (பாதம்) வணங்கிய பிறகு திருமேனியைக் காணுங்கள். பின்னர் திருமுடியை(தலை) தரிசியுங்கள்.

எம்.கஜலட்சுமி, தேனி

*உழவாரப்பணி (கோயிலைச் சுத்தம் செய்தல்) செய்தால் கடவுளின் அருள் கிடைக்குமா?

கிடைக்கும். உடல், மனம் பலம் பெருகும். கிரக தோஷம் விலகும்.

வி.ரவீந்திரன், பெங்களூரு

*மோட்ச தீபம் என்றால் என்ன?

ஒருவர் இறந்தால் அவரது ஆன்மா சாந்தி அடைய 30 நாட்களுக்கு பிறகு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றுவர். இதனால் இறந்த உயிர் கடவுளின் திருவடியை அடையும்.

சி.மலர்விழி, திருவள்ளூர்

*எவர்சில்வர் விளக்கில் தீபம் ஏற்றலாமா?

இரும்பு சம்பந்தப்பட்டது எவர்சில்வர். அதனால் அதில் தீபம் ஏற்றக் கூடாது.

எஸ்.மீனாட்சி, விழுப்புரம்

*பூஜையறையில் வலம்புரிச்சங்கு இருக்கலாமா

இருக்கலாம். தங்கம் அல்லது ரத்தினங்களை சங்கிற்குள் வைத்தும் பூஜிக்கலாம். அபிேஷகத்திற்கும் இதனை பயன்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us