தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 10, 2021 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2021 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* தேவாரப்பாடல் பாடிய மூவர் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.

* தேவாரம் பாடிய மூவருடன் மாணிக்கவாசகரையும் சேர்த்து 'நால்வர்' என அழைப்பர்.

* மகாகவி காளிதாசரால் எழுதப்பட்ட முருகனின் வரலாறு குமார சம்பவம்.

* கல்லையே பூவாக கருதி சிவபூஜை செய்தவர் சாக்கிய நாயனார்.

* சடகோபரை 'நம் ஆழ்வார்' என்று அன்புடன் அழைத்தவர் ரங்கநாதப்பெருமாள்.

* பலனை எதிர்பார்த்து வழிபடுவதற்கு காம்ய பக்தி என்று பெயர். பலனை எதிர்பார்க்காமல் வழிபடுவது நிஷ்காம்ய பக்தி.

* லட்சுமணமுனி என அழைக்கப்படுபவர் ராமானுஜர்.

* திருமாலிடம் இருக்கும் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

* திருச்செந்துாரின் புராதனப்பெயர் திருச்சீரலைவாய்.

* ஆட்டுமுகம் கொண்ட சூரபத்மனின் தங்கை அஜமுகி.

* நோய் தீர வேண்டி மாரியம்மனுக்கு செய்யும் வழிபாடு மாவிளக்கு.

* சிவகிரி, சக்திகிரி என்னும் மலைகளை தோளில் காவடியாக சுமந்தவர் இடும்பன்.

* மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்டபெயர் தடாதகை பிராட்டியார். மீன் போன்ற கண்களைக் கொண்டவள் என்பதால் கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறாள்.

* சூரசம்ஹாரம் நிகழ்த்திய முருகன் சாந்தமுடன் வீற்றிருக்கும் படைவீடு திருத்தணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us