தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 29, 2021 04:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 04:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ். தர்ஷினி, திருநெல்வேலி

*வீட்டை சாணத்தால் மெழுகினால் நல்லதா?

நல்லது. ஆனால் பசுவின் சாணம் தான் சிறந்த கிருமி நாசினி. இதனால் தீயசக்தி அண்டாது. லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

ஜி. ரம்யா, கோவை

*வயோதிகம் காரணமாக சமைக்க முடியவில்லை. அதனால் வெளியில் தயாரித்த உணவை சாப்பிடும் சூழலில் அமாவாசை விரதம் இருக்கலாமா?

அமாவாசை தர்ப்பணம் அவசியம். அன்று வெங்காயம், பூண்டு சேர்க்கக் கூடாது. காலையில் இருந்து விரதமிருந்து மதியம் காக்கைக்கு உணவு வைத்து விட்டு பின் உண்ணுங்கள்.

கே. அஸ்வின், திண்டுக்கல்

*ஸ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம் என்பது ஏன்?

ஸ்ரீமந் நாராயணரின் இருப்பிடம் வைகுண்டம். அதைப் போல நாம் வாழும் பூமியில் அவரது இருப்பிடமாக திகழ்வது ஸ்ரீரங்கம். அதனடிப்படையில் 'பூலோக வைகுண்டம்' என்கிறோம்.

எம். சரண்யா, காஞ்சிபுரம்

*பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பூக்களை மிதக்க விடலாமா...

வாஸ்து பரிகாரங்களில் இதுவும் ஒன்று. வாசலில் இட்ட கோலம் போல இந்த பூக்கோலமும் கலைநயம் மிக்கதே.

ஜி. அகில்சேது, சாத்துார்

*பூஜையறையில் சூலாயுதம் வைத்து வழிபடலாமா?

வழிபடக் கூடாது.

எ. விஜயலட்சுமி, சென்னை

*ஆணவம், கன்மம்(கர்மா), மாயையை வெல்வது எப்படி?

உயிர்களிடம் உள்ள 'நான்' என்னும் எண்ணமே ஆணவம். அந்த உயிரால் செய்யப்படும் செயல்களைக் குறிப்பது கன்மம். எண்ணமும், செயலும் இணைவதால் ஏற்படும் ஆசாபாசமே மாயை. இந்த மாயையால் தான் நமக்கு பிறவி தொடர்கிறது. இதிலிருந்து தப்பிக்க மனதை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துங்கள்.

டி.ஜெகதா, பெங்களூரு

*துளசிச்செடியை ஆண்கள் சுற்றி வந்து வழிபடலாமா?

வழிபடலாம். மகாலட்சுமியின் அம்சமான துளசியை வலம் வருவது புனிதமான செயல். இருபாலருக்கும் நன்மையளிக்கும்.

ஆர். மிருநாளினி, திருப்பூர்

*ஒரே மாதத்தில் இரண்டு முறை பிறந்த நட்சத்திரம் வந்தால் எந்த நாளில் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

இரண்டாவதாக வரும் நட்சத்திர நாளில் தான் கொண்டாடப்பட வேண்டும்.

ஜெ. ராஜேஸ்வரி, புதுச்சேரி

*பரஸ்தானம் என்றால் என்ன?

வெளியூர் செல்லும் போது வீட்டில் இருந்து நல்ல நேரத்தில் புறப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் நல்ல நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு வேறிடத்தில் தங்கியிருப்பதற்கு பரஸ்தானம் (பர - வேறு, ஸ்தானம் - இடம்) என்று பெயர். சிலர் பயணத்தை நல்ல நேரத்தில் தொடங்குவதன் அறிகுறியாக சூட்கேஸ், பைகளை வெளியில் எடுத்து வைப்பதும் உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us