தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : நவ 12, 2021 12:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2021 12:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.பிருந்தா, புதுச்சேரி

*குழந்தை வரம் கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள்.

வளர்பிறை சஷ்டி திதியன்று விரதமிருந்து மாலையில் முருகன் கோயிலில் விளக்கேற்றி வழிபடுங்கள். கந்தசஷ்டி கவசத்தை காலை, மாலையில் படியுங்கள்.

பி.கோமதி, பெங்களூரு

*மன சஞ்சலம் தீர பரிகாரம் சொல்லுங்கள்?

ஏன் சஞ்சலப்படுகிறாய் என மனதை விடாமல் கேளுங்கள். சஞ்சலம் தேவையில்லை என்னும் உறுதி உண்டாகும். திங்கட்கிழமை அல்லது பவுர்ணமியன்று கோயில் வழிபாடு செய்வது நன்மை தரும்.

பி.சீனிவாசன், மதுரை

*என் வயது 80. கோயிலுக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்தே வழிபட்டால் பலனுண்டா?

நிச்சயம் உண்டு. 'கோயிலுக்கு செல்ல முடியவில்லையே' என வருந்தும் உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.

கே.விஜயலட்சுமி, சிவகாசி

*விளக்கேற்றும் மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதாமே...

சூரிய அஸ்தமனம் முடியும் வரை சாப்பிடுவது நல்லதல்ல. வழிபாட்டுக்குரிய இந்த நேரத்தில் தலை சீவுவது, நகம் வெட்டுவது, துாங்குவது கூடாது. நோயாளி, குழந்தைகளுக்கு இது பொருந்தாது.

அ. யாழினி பர்வதம், சென்னை

*கட்டி முடிக்காத வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்தலாமா...

நல்ல நாளில் கிரகப்பிரவேசம் நடத்த வேண்டும் என்பதால் இதில் தவறில்லை.

பா.சுதா, பண்ருட்டி

*வீட்டில் இரண்டு காமாட்சி விளக்குகள் ஏற்றலாமா?

ஏற்றலாம்.

எம்.அகிலா, கோவை

*யானை முடி மோதிரம் அணிவது ஏன்?

திருஷ்டி, செய்வினை தோஷத்தில் இருந்து விடுபட இதை அணிகிறார்கள்.

அ.ரவீந்திரன், கன்னியாகுமரி

*நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்ற வேண்டும்?

மூலவரைச் சுற்றும் போதே நவக்கிரகங்களையும் ஒருமுறை சுற்றினால் போதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us