தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 14, 2022 02:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2022 02:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.சிதம்பரம், பெங்களூரு

* பெயரில் மாற்றம் செய்தால் வாழ்வில் ஏற்றம் ஏற்படுமா?

பெயரில் எழுத்தை மாற்றினால் தலையெழுத்தை மாற்ற முடியுமா? முடியாது. 'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்கிறார் திருவள்ளுவர். முயற்சிக்கு ஏற்ப விதியின் தாக்கம் குறையும்.

வெ.ராஜேஸ்வரி, சென்னை

* பொறாமை கொண்டவர்கள் என்னை விட்டு விலக என்ன செய்யலாம்?

நீங்கள்தான் விலக வேண்டும். ராகு காலத்தில் துர்கையம்மனை வழிபடுங்கள்.

பி.முனியசாமி, திண்டுக்கல்

* சுவாமிக்கு எருமைப்பால் அபிஷேகம் செய்யலாமா?

பசும்பாலைத் தவிர மற்ற பாலால் அபிஷேகம் செய்யக்கூடாது.

டி.கே.சுகுமார், கோயம்புத்துார்

* சுமங்கலிகள் வெள்ளைச்சேலை அணிந்தால் அபசகுனமா?

இல்லை. சேலையில் கரை(கலர் பார்டர்) இருந்தால் போதும். சரஸ்வதிக்குரியது வெண்ணிற ஆடை. இதற்காக கவலைப்பட வேண்டாம்.

கே.எஸ்.மோகன்ராம், கூடலுார், தேனி

* ராகுகாலம், எமகண்டம் தவிர்த்த மற்ற நேரங்களில் நல்ல விஷயங்களைச் செய்யலாமா?

செய்யலாம். ஆனால் அன்று உங்கள் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது.

எஸ்.சிவகுமார், புதுச்சேரி

* பிரான்சில் உள்ள என் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஜாதகம் எப்படி கணிப்பது?

ஒவ்வொரு நாட்டிற்கும் சூரிய உதயம் மாறுபடும். அதன்படியே கிரகங்களின் நிலையும் அமையும். வெளிநாடுகளுக்காக ஜோதிடர்கள் தனி பஞ்சாங்கம் வெளியிடுகிறார்கள். அதைக் கொண்டு ஜாதகம் கணியுங்கள்.

க.நடராஜன், தென்காசி

* என் மனைவி காலமாகி நான்கு மாதமாகி விட்டது. எப்போது கோயிலுக்குச் செல்லலாம்?

பதினாறாம் நாள் காரியத்தை முடித்த மறுநாளில் இருந்து கொடிமரம் இல்லாத கோயிலுக்குச் செல்லலாம். கொடிமரம் உள்ள கோயில்கள், குலதெய்வம், மலை, கடல் தலங்களுக்கு ஓராண்டுக்குச் செல்ல வேண்டாம்.

கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு

* புலன்களை அடக்க என்ன செய்ய வேண்டும்?

எண்ணம், சொல், செயலால் நல்லதைச் செய்யுங்கள். எதற்கும் கோபப்படாமல் அமைதியாக இருங்கள். கோயில் வழிபாட்டால் மனம், புலன்கள் உங்கள் வசமாகும்.

ஆர்.வனிதா, திருப்பூர்

* கோயில் குளத்தில் உப்பு, மிளகு இடுவது ஏன்?

குளத்தில் இடக் கூடாது. கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினால் போதும். இதனால் தோல் நோய்கள் குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us