தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 25, 2022 11:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2022 11:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.மணிகண்டன், கடலுார்

* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்வது உண்மையா?

அந்த காலத்தில் அரசனுக்கும், இந்த காலத்தில் நீதிமன்றத்திற்கும் தவறு செய்பவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு பயப்படுவதே இல்லை. எல்லாம் அறிந்த கடவுள் அதற்கான காலம் வரும் போது நிச்சயம் தண்டனை தருவார்.

எஸ்.சிவகாமி, பெங்களூரு

* ஊழிக்கூத்து என்றால் என்ன?

கலியுகத்தின் முடிவில் உலகம் சிவபெருமானிடம் ஒன்று சேருவதை 'ஊழிக்காலம்' என அழைக்கிறோம். அப்போது அவர் ஆடும் நடனத்திற்கு 'ஊழிக்கூத்து' என்று பெயர்.

அ.ரவீந்திரன், கன்னியாகுமரி

* பசுவின் கன்றை தானம் கொடுக்கலாமா?

பசுவின் கன்றை தானம் கொடுக்கலாம். பல பிறவிகளில் செய்த பாவம் இதனால் போகும்.

டி. மஹிமா, கோவை

* திதியன்று சிராத்தம் செய்ய முடியாவிட்டால் வேறு நாளில் செய்யலாமா?

செய்யலாம். பிறப்பு, இறப்பு தீட்டால் சிராத்தம் குறிப்பிட்ட நாளில் செய்ய இயலாமல் போகும். தீட்டு முடிந்த மறுநாளே திதி (சிராத்தம்) கொடுத்துவிட வேண்டும்.

எல். கந்தரூபி, திருவேற்காடு

* அம்பிகையை 'கவுரி' என்பது ஏன்?

அசுரர்களிடம் இருந்து தங்களைக் காக்கும்படி அம்பிகையை தேவர்கள் வேண்டினர். அதற்காக தன் உடலில் இருந்து கருமை நிறத்தில், காளியை உருவாக்கி போர் புரிய அனுப்பினாள். அதனால் வெள்ளை நிறத்தவளாக அம்பிகை காட்சியளித்ததால் 'கவுரி' என பெயர் பெற்றாள். 'கவுரம்' என்றால் வெண்மை.

குறிப்பு

1. கருமையும், வெண்மையும் கலந்ததால் பச்சை நிறம் கொண்டவள் பார்வதி.

2. கருமை நிறம் கொண்டவள் காளி.

3. வெண்ணிறம் கொண்டவள் கவுரி.

பா.தனலட்சுமி, திருநெல்வேலி

* மறுபிறவி இருப்பது உண்மையா? இப்போது தம்பதியாக இருப்பவர்களே அப்போதும் இருப்பார்களா?

மறுபிறவி இருப்பது உண்மை. அப்போது கணவனும், மனைவியுமாக வாழலாம். வாழாமலும் இருக்கலாம். அடுத்த பிறவியில் எங்கே, எப்படி பிறப்போம் என்பது அவரவர் செய்த பாவ, புண்ணியத்தை பொறுத்து கடவுள் தீர்மானிப்பார்.

இரா. ரெங்கசாமி, வடுகப்பட்டி, தேனி

* தைலக் காப்பில் கருப்பண்ண சுவாமியைக் காண பெண்களை அனுமதிப்பதில்லையே ஏன்?

தைலக்காப்பில் தெய்வங்களை தரிசிப்பதற்கு விதிமுறைகளை பெரியோர்கள் உருவாக்கியுள்ளனர். அதை பின்பற்றுவதே நல்லது.

கே.ராகவன், சிவகாசி

* கடவுளைக் கண்ணால் காண முடியவில்லையே ஏன்?

இன்பம், துன்பம், பசி, தாகம் போல உணர்வால் அறியப்பட வேண்டியவர் கடவுள். அதனால் கண்களால் அவரைக் காண முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us