தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 24, 2022 05:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2022 05:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 18, பங்குனி 4: பங்குனி உத்திரம். திருப்பரங்குன்றம் முருகன் தங்க குதிரையில் பவனி, திருச்சுழி, கழுகுமலை, கங்கை கொண்டான் கோயில்களில் தீர்த்தம், பரமக்குடி முத்தாலம்மன் குதிரை வாகனம், மதுரை பிரசன்ன வெங்கடேசர் வைகை எழுந்தருளல், தசாவதாரக் காட்சி, திருப்புல்லாணி ஜெகந்நாதர் தேர், பழநி முருகன் தேர், திருநெல்வேலி நெல்லையப்பர் பாண்டிய மன்னருக்கு செங்கோல் கொடுத்தருளிய லீலை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னார் யானை வாகனம், ரங்க நாச்சியார் திருநட்சத்திரம்.

மார்ச் 19, பங்குனி 5 திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம், பழநி முருகன் தங்க குதிரை வாகனம், பரமக்குடி முத்தாலம்மன் தேர், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், அகோபில மடம் 21 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், மதுரை பிரசன்ன வெங்கடேசர் இரவு கருட வாகனம்.

மார்ச் 20, பங்குனி 6: மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கள்ளர் திருக்கோலம், திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிேஷகம், பரமக்குடி அன்னை முத்தாலம்மன் தீர்த்தம், ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப்பெருமாள், திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் உற்ஸவம் ஆரம்பம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம், கரிநாள்,

மார்ச் 21, பங்குனி 7: முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாணம், மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் பூப்பல்லக்கு, ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் சூரியபிரபையில் தாயாருடன் பவனி, திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் கமலப் பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கல்யாண அவசரத் திருக்கோலம், காரைக்கால் அம்மையார் குருபூஜை, செடி கொடி வைக்க நல்ல நாள்.

மார்ச் 22, பங்குனி 8: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புன்னைமர கண்ணன் அலங்காரம், திருப்பரங்குன்றம் முருகன் தேர், இரவு தங்கமயில் வாகனம், மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உற்ஸவ சாந்தி, சென்னை சென்னமல்லீஸ்வரர் விடையாற்று உற்ஸவம், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் வெள்ளிசேஷ வாகனத்தில் தாயாருடன் பவனி, திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பவனி, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

மார்ச் 23, பங்குனி 9: முகூர்த்தநாள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஹம்ச வாகனம், திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கருடவாகனம், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் வெள்ளி பல்லக்கு, சென்னை சென்னமல்லீஸ்வரர் விடையாற்று உற்ஸவம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், செடி, கொடிகள் வைக்க நல்ல நாள்.

மார்ச் 24, பங்குனி 10: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரி கண்ணன் அலங்காரம், சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இரவு வெள்ளி அனுமன் வாகனம், தாயார் வெள்ளி கமல வாகனம், திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் காலை சிம்ம வானகம் இரவு சேஷ வாகனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us