ADDED : மார் 24, 2022 05:06 PM

* உபநிஷதம் என்பதன் பொருள் 'குருவிடம் அமர்ந்து கற்கும் வித்தை'
* வேதத்தின் இதயமாக கருதப்படும் மந்திரம் ஸ்ரீருத்ரம்.
* யோகாசனப் பயிற்சியின் தந்தையாக விளங்குபவர் பதஞ்சலி முனிவர்.
* மனதை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி பிராணயாமம்.
* தட்சிணேஸ்வரம் காளி கோயிலைக் கட்டியவர் ராணி ராசமணி.
* தமிழுக்கு கதியாக திகழ்பவர்கள் க - கம்பர் தி- திருவள்ளுவர்.
* மன்மதனின் மனைவி ரதிதேவி.
* திருமாலின் மூன்று தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி.
* கடவுளின் அழகை பாதம் முதல் தலை வரை பாடுவது பாதாதிகேசம்.
* ஞானதீபம் என ராமானுஜரால் போற்றப்பட்ட பாசுரம் முதல் திருவந்தாதி.
* முதல் திருவந்தாதியைப் பாடிய ஆழ்வார் பொய்கையாழ்வார்.
* சித்தாந்த அஷ்டகம் என்னும் எட்டு நுால்களை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.
* சுக்கிராச்சாரியாரின் மனைவியின் பெயர் சுகீர்த்தி.
* கோப பிரசாதம் என்னும் நுாலை எழுதியவர் நக்கீரர்.
* தந்தையாரின் காலை வெட்டிய சிவனடியார் சண்டேச நாயனார்.
