தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூலை 26, 2022 09:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2022 09:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி.மணி, மதுராந்தகம், செங்கல்பட்டு.

*பல்லி சொல்லும், பல்லி விழும் பலன்கள் உண்மைதானா?

உண்மை தான். உடம்பில் பல்லி விழும் இடம், பல்லி சத்தமிடும் திசையை பொறுத்து பலன்கள் அமையும்.

த.ராமச்சந்திரன், தேவிபட்டினம், ராமநாதபுரம்.

*முக்தி பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன?

முக்தி என்பது உயிர்கள் அடைய வேண்டிய உயர்ந்த நிலை. விருப்பு, வெறுப்பின்றி வாழ்தல், கடவுளைச் சரணடைதல், தியானம் செய்தல், நல்லவர்களுடன் பழகுதல் என நற்பண்புகள் கொண்டவர்கள் முக்தி பெறுவர்.

பி.சுமதி, மைசூரு.

*உழவாரப்பணி செய்தால் நன்மை கிடைக்குமா?

கிடைக்கும். சிவனடியாரான திருநாவுக்கரசர் உழவாரப்பணி மூலம் சிவபெருமானை தரிசிக்கும் பேறு பெற்றார். இதில் ஈடுபடுவோருக்கு சிவனருள் கிடைக்கும். கவலைகள் தீரும். மனவலிமை அதிகரிக்கும்.

கே.சுபாஷினி, மயூர்விஹார், புதுடில்லி.

*கோயில் வழிபாட்டின் போது அழுதால்தான் பலன் கிடைக்குமா

அப்படியில்லை. கோயிலில் தரிசனம் செய்தால் போதும். உங்களின் நிலையை கடவுள் நன்றாக அறிவார்.

எம்.சுந்தரி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.

*சித்தர் சமாதிகளை எப்போது வழிபடலாம்?

அமாவாசை, பவுர்ணமி, அந்தந்த சித்தருக்குரிய நட்சத்திர நாட்களில் வழிபடுவது நல்லது.

வி.வாசுதேவன், திருவல்லிக்கேணி, சென்னை.

*சொர்க்கம், நரகம் விளக்கம் தருக.

இறந்த பின்னும் உயிர்களுக்கு இன்ப, துன்ப அனுபவம் உண்டு. உயிர்கள் செய்த புண்ணியம், பாவத்தைப் பொறுத்து இது அமையும்.

ம.மாடசாமி, பெதப்பம்பட்டி, திருப்பூர்.

*கடல் புனிதமாக கருதப்படுவது ஏன்?

தேவர்கள் விரும்பி வாழும் இடமாகவும், மகாலட்சுமியின் பிறப்பிடமாகவும் இருப்பதால் கடல் புனிதமாக கருதப்படுகிறது.

சு.லிங்கேஸ்வரி, திசையன்விளை, திருநெல்வேலி

*சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டாமே....

ஆம். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்பவை.

கே.சந்திரா, வில்லுக்குறி, கன்னியாகுமரி.

*உண்ணும் போது வாழை இலையை எப்படி இட வேண்டும்?

இலையின் நுனி உண்பவருக்கு இடது பக்கம் இருக்க வேண்டும்.

எம்.விசாலாட்சி, கள்ளிக்குடி, மதுரை.

*ஆவாஹனம் என்றால் என்ன?

வரவழைத்தல் என்பது இதன் பொருள். யாகத்தின் போது கடவுளை வரவழைக்கச் சொல்லப்படும் மந்திரங்களை ஆவாஹனம் என்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us