ADDED : ஜூலை 26, 2022 09:51 AM

* விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மகாலிங்கம் கோயில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும்.
* இந்திர மலை, ஏம மலை வருண மலை, குபேர மலை இந்த மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது சதுரகிரி மலை.
* இங்குள்ள மூலஸ்தான சுவாமி சுந்தரமகாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளார்.
* விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை சென்றால் சதுரகிரி மலை அடிவாரத்தை அடையலாம்.
* இம்மலையில் ஐந்து கோயில்கள் உள்ளன அவையாவன. மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம் சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம் காட்டு லிங்கம்
* திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் சாப்டூர் பாளையக்காரர்களால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் கட்டப்பட்டது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1:00 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* சதுரகிரிமலையில் உள்ள தீர்த்தங்களில் நீராடினாலும், அங்குள்ள மூலிகை காற்றை சுவாசித்தாலும் நோய் நீங்குகிறது.
* போகர் இம்மலையில் தங்கியிருந்தபோது பழநியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்தார்.
* இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். இதனை சித்தர்கள் வெளிச்சத்திற்காக உபயோகித்துள்ளனர்.
* வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி அன்று இம்மலைக்கு பக்தர்கள் மலையேறி வழிபட வருகின்றனர்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் இங்கு தேனும் தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* தேனி மாவட்டம் வருஷநாட்டிலிருந்து சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதை ஆடி அமாவாசை தினத்தன்று மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
* இங்கு வந்து மகாலிங்கங்களை தரிசனம் செய்வதால் மனதிற்கு நிம்மதியும், உடலிற்கு புத்துணர்ச்சியும் உண்டாகிறது.
* சதுரகிரி மலையில் மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
