ADDED : ஜூலை 26, 2022 10:03 AM

* குழந்தை இல்லாதவர்கள் பசுவுக்கு புல், அகத்திக்கீரையை வெள்ளிதோறும் கொடுத்தால் சுபச்செய்தி கிடைக்கும்.
* முயற்சியில் வெற்றி கிடைக்க விநாயகரையும், மோட்சம் கிடைக்க சிவபெருமானையும் வணங்க வேண்டும்.
* புனிதமான இடம் மாட்டுத்தொழுவம். அங்கு செருப்பணிந்து செல்லக்கூடாது.
* திங்கட்கிழமை, அஷ்டமி திதி இணைந்து வரும் நாளில், சிவபெருமானை வணங்கினால் கிரகதோஷம் நீங்கும்.
* வெள்ளி அல்லது பித்தளையால் ஆன விளக்கை மட்டுமே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
* ஒரு வீட்டில் திருமணம் நடந்து ஓராண்டு முடிவதற்குள், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மொட்டை அடிக்கக்கூடாது. கடவுளுக்கு நேர்த்திக்கடனாக இருந்தாலும் செய்யக்கூடாது.
* பரணி, கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் புத்தாடை அணியக்கூடாது.
* புதிதாக வாங்கிய தங்க நகைகளை முதன் முதலாக அணிய சிறந்த திதிகள் பவுர்ணமி, பிரதமை, பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி.
* சாஷ்டாங்கமாக உடல் முழுவதும் தரையில் படும்படி நமஸ்காரம் செய்வது உயர்வானது.
* வீட்டில் காலை, மாலையில் தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வந்தால் மன அமைதி கிடைக்கும்.
* திருமணமானவர்கள் தினமும் முன்னோருக்கு நீர், பால், பழம் படைத்து வணங்க வேண்டும். இயலாதவர்கள் நீர் மட்டுமாவது வைக்கலாம்.
* பிறந்த குழந்தைக்கு 3வது மாதத்தில் சூரியனையும், 4 வது மாதத்தில் பூரண சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டும்.
