sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : நவ 03, 2022 10:41 AM

Google News

ADDED : நவ 03, 2022 10:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.ஸ்ரீதாரணி, மேலுார், மதுரை.

* குளிக்காமல் பூஜை செய்யலாமா?

தலைக்குக் குளிக்காமல் பூஜை செய்யக் கூடாது. ஆனால் உடல்நலம் இல்லாத நிலையில் குளிக்க முடியாது. அப்போது மஞ்சள் கலந்த நீரை தலையில் தெளித்துக் கொண்டு துாய ஆடை உடுத்தி பூஜை செய்யலாம்.

வி.ராஜராஜ், பெங்களூரு.

*முதிர்கன்னியருக்கு வாழ்வளித்தால் என்ன கிடைக்கும்?

முதிர்கன்னியருக்கு வாழ்வு அளிப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர், விருதுநகர்.

*கோயில் பிரசாதம் மீதம் இருந்தால் என்ன செய்யலாம்?

அக்கம்பக்கத்தினருக்கு கொடுக்கலாமே.

வி.வனஜா, கால்காஜி, டில்லி.

*என் தந்தையின் பிறந்தநாளில் ஆயுள் ஹோமம் நடத்தினோம். தொடர்ந்து நடத்தலாமா?

ஆண்டுதோறும் நடத்தலாம்.

வி.வாசுதேவன், பீடம்பள்ளி, கோயம்புத்துார்.

*மகாலட்சுமிக்கு செந்தாமரை, சரஸ்வதிக்கு வெண்தாமரை இருப்பது ஏன்?

பணம் சம்பாதிப்பவன் செம்மையுடன் (சிவப்பு) வாழ வேண்டும். அதாவது நேர்மையை பின்பற்ற வேண்டும் என்பதன் அடையாளமாக மகாலட்சுமி செந்தாமரையில் இருக்கிறாள். கல்வியைப் பெற விரும்பினால் மனம் துாய்மையாக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக சரஸ்வதி வெண்தாமரையில் இருக்கிறாள்.

பி.கணேசன், சோழிங்கநல்லுார், சென்னை.

*சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதன் பொருள் என்ன?

சித்தம் என்றால் அறிவு. அதை இயக்குவது நம் உயிராகிய சிவன். அறிவுபூர்வமாக செயல்படும் போது சிவனே நம்மை இயக்குகிறார் என்ற அடிப்படையில் 'சித்தம் போக்கு சிவன் போக்கு' என பழமொழியாகக் கூறினர்.

வி.சந்தோஷி, ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி.

*விதி, மதி, கதி என்றால் என்ன?

முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியத்தின் பலனாக நம் வாழ்வு அமைகிறது. இதை விதி (ஊழ்வினை) என்பர். விதியில் இருந்து தப்பிக்க பரிகாரம் தேடுவது மதி (அறிவு), பிறவிதோறும் இடைவிடாமல் நம்மை துரத்தும் விதியை வென்று வாழ்க்கைப் பயணத்தை தொடர்வது கதி (செல்லுதல்)

எஸ்.ரகு, விளாத்திகுளம், துாத்துக்குடி.

*வீட்டில் பூனைகள் தானாக இறந்துவிட்டன. பரிகாரம் தேவையா?

இயற்கையாக இறந்தால் தோஷம் ஆகாது. பரிகாரம் தேவையில்லை.

கே.சிவராமன், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.

*தர்ப்பணம், சிராத்தம், திலஹோமத்தை எப்போது எங்கு செய்யலாம்?

அமாவாசை, மாதப்பிறப்பு போன்ற புண்ணிய காலங்களில் செய்வது தர்ப்பணம். பெற்றோர் மறைந்த திதியன்று (தமிழ் மாத அடிப்படையில்) செய்வது சிராத்தம். இந்த இரண்டையும் வீட்டிலோ அல்லது நீர்க்கரையிலோ செய்யலாம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் நீர்க்கரைகளில் மட்டும் செய்வது தில ேஹாமம். ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு போன்ற தலங்களில் இதைச் செய்வது சிறப்பு.






      Dinamalar
      Follow us