ADDED : நவ 03, 2022 10:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தீபாவளியன்று மகாலட்சுமி தாயாரை அதிகாலையில் நீராடி வழிபடுபவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
* பார்வதி தேவி கேதாரகவுரி விரதம் முடித்து சிவபெருமானிடம் சரிபாதியை பெற்ற நாள் தீபாவளி என்கிறது ஸ்கந்தபுராணம்.
* 1117 ல் சாளுக்கிய திருபுவன மன்னர் தீபாவளி அன்று சாத்யாயர் என்னும் அறிஞரின் திறமையை பாராட்டி பரிசளித்தார் என்ற செய்தி கன்னட கல்வெட்டில் உள்ளது.
* பழங்காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் தீபாவளி நாட்களில் மக்களுக்கு பல சலுகைகளை அளித்துள்ளார்கள் என்பது வரலாற்றுக்குறிப்பு.
* இலங்கை, நேபாளம், மியான்மர், சிங்கப்பூர், பிஜி, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் தீபாவளியை விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

