sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 27, 2023 08:12 AM

Google News

ADDED : மார் 27, 2023 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வே.ஹேமா, முகுந்தநல்லுார், விருத்தாச்சலம்.

*பசுவும் கன்றும் எதிரில் வந்தால்...

இதை பார்ப்பது நல்ல சகுனம். நினைத்தது நிறைவேறும்.

கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதுார், கன்னியாகுமரி.

*சரியை, கிரியை வேறுபாடு என்ன?

கோயிலை துாய்மைப்படுத்துதல், பூக்கள் தொடுத்து பூஜைக்கு கொடுத்தல் போன்ற செயல்கள் சரியை. மந்திரம் ஜபித்தல், தியானம், தவம் முதலியன கிரியை.

வி.கந்தன், மானுார், திருநெல்வேலி.

*அரசமரத்தை அகற்றி விட்டு மண்டபம் கட்ட விரும்புகிறோம். செய்யலாமா...

வழிபாட்டில் உள்ள அரச மரத்தை வெட்டக் கூடாது. வழிபடாத மரமாக இருந்தால் பரிகாரமாக பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த பின் வெட்டலாம். அதை கோயிலுக்கு தானமாக கொடுங்கள்.

அ.காமாட்சி, திருமுருகன்பூண்டி, திருப்பூர்.

*ஜுரதேவருக்கு மிளகு ரசம் படைப்பது ஏன்?

மிளகு ரசம் படைத்து வழிபட ஜுரம் நீங்கும். மனம், உடல் பலம் பெறும்.

க.பரணிபாரதி, ஆவடி, திருவள்ளூர்.

*கோயில் சுவருடன் ஒட்டிய வீட்டில் குடியிருக்கலாமா?

குடியிருக்க வேண்டாம். கோயில் சுவரை ஒட்டி வீடு கட்டக்கூடாது. இதுவும் ஆக்கிரமிப்பால் நேரும் தவறுதான்.

எஸ்.ராமரத்தினம், சோழவந்தான், மதுரை.

*முதுமையால் திருப்பதி செல்ல முடியவில்லை. நேர்த்திக்கடனை எப்படி செலுத்துவது?

காணிக்கையை யார் மூலமாவது செலுத்துங்கள். முடி காணிக்கை செலுத்த வேண்டி இருந்தால் பெருமாள் கோயிலில் செலுத்தி விட்டு, திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொள்ளுங்கள்.

எம்.முத்துக்குமார், டில்லி.

*காசியில் வாங்கிய ஸ்படிக லிங்கம் உடைந்து விட்டது. என்ன செய்யலாம்?

சிறியதாக உடைந்திருந்தால் சரிசெய்து பூஜிக்கலாம். முடியாவிட்டால் புதிய லிங்கம் வாங்கி பூஜியுங்கள்.

எஸ்.ரவி, ராமமூர்த்திநகர், பெங்களூரு.

*சிலர் விபூதியை பூச்சிக்கடிக்கு பூசுகிறார்களே...

'நோய் தீர்க்க வல்லது திருநீறு' என்கிறது திருநீற்றுப் பதிகம். பசுவின் சாணத்தில் செய்த திருநீறு மருந்தாகவும் உள்ளது.

எஸ்.நடராஜன், திருப்புவனம், சிவகங்கை.

*கோயிலில் தரும் விபூதி, குங்குமத்தை வீட்டில் சேர்த்து வைக்கலாமா?

சேர்த்து வைக்கலாம். குடும்பத்தினர் அனைவரும் தினமும் நெற்றியில் பூசுவது மிக அவசியம்.

ஏ.பரசுராம், கோடம்பாக்கம், சென்னை.

*புதையுண்ட சிவலிங்கத்தை வழிபடலாமா...

புதையுண்ட சிவலிங்கத்தை வழிபடுவது புண்ணியம். கோயில் கட்டுவது சிறப்பு.






      Dinamalar
      Follow us