sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 23, 2023 03:38 PM

Google News

ADDED : ஜூலை 23, 2023 03:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கார்த்திக், திருமங்கலம், மதுரை.

*தவறான வழியில் சேர்த்த பணம் நிலைக்குமா?

நிலைக்காது. அத்துடன் விவகாரங்களில் சிக்க நேரிடும். நிம்மதியும் போகும்.

ஆர்.பரிமளா, நத்தப்பட்டு, கடலுார்.

*கருவறையில் சுவாமிக்கு முன் ஐந்து கிண்ணம் இருப்பது ஏன்?

இதை அர்க்கிய பாத்திரம் என்பர். கை, கால் கழுவுதல், குடிக்க நீர் கொடுத்தல், தலை மீது தெளித்தல், எழுந்தருளச் செய்யும் போது தெளித்தல், பூஜைப் பொருளை புனிதப்படுத்துதல் இவற்றுக்காக இவை உள்ளன.

எம்.அனிதா, கீழ்குந்தா, நீலகிரி.

*ஞாபக மறதி விலக யாரை வழிபடலாம்?

சரஸ்வதியை வழிபடுங்கள். வல்லாரை கீரையை உண்பது நல்லது. மூலிகையான இதற்கு 'சரஸ்வதி' என்றும் பெயருண்டு.

எல்.நவநீதன், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு.

*அருகம்புல் தவிர எந்த மாலைகளை விநாயகருக்கு சாத்தலாம்?

எருக்கு, தும்பை, திருநீற்றுப் பச்சிலை, வன்னி இலைகள், வாசனை பூக்களையும் மாலையாக சாத்தலாம்.

எஸ்.கண்ணன், பத்தமடை, திருநெல்வேலி.

*கண்டிகை என்பதன் பொருள் என்ன?

கழுத்தில் அணியும் ஆபரணம் என்பது இதன் பொருள். தற்போது பெரிய ருத்ராட்சங்களால் ஆன மாலையைக் கண்டிகை என்பர்.

ஜி.கோகிலா, ஏழுதேசம், கன்னியாகுமரி.

*திருமணத்தின் போது பெற்றோருக்கு பாதபூஜை செய்யணுமா?

பெற்றோருக்கு பாதபூஜை செய்ய தேவையில்லை. திருமணத்தின் போது மணமகனை சிவன் அல்லது விஷ்ணுவாக கருதி பாதபூஜை செய்வதே சரியான முறை.

எம்.கமலேஷ், தேவனஹள்ளி, பெங்களூரு.

*கோபமூட்டும் நபரை என்ன செய்யலாம்?

கோமாளியாக கருதி அவரிடம் இருந்து விலகுங்கள். இதனால் ரத்தக் கொதிப்பு நமக்கு வராது.

கே.சுதர்சன், வசந்த்குஞ்ச், டில்லி.

*துள்ளு மாவு, தினைமாவு இரண்டும் ஒன்றா...

இல்லை. பச்சரிசியை இடித்து மாவாக்கி சர்க்கரை சேர்த்து அம்மனுக்கு ஏற்றுவது துள்ளுமாவு விளக்கு. இதை இடிக்கும் போது துள்ளி விழுவதால் இப்பெயர் வந்தது. குறமகள் வள்ளிக்கு (முருகனின் மனைவி) பெருமை சேர்க்கும் விதமாக முருகனுக்கு ஏற்றுவது தினை மாவு விளக்கு.

பி.அயோத்திராம், சிறுமலை, திண்டுக்கல்.

*வீதியுலா வரும் சுவாமிக்கு வாசலில் விளக்கேற்றுவது ஏன்?

தேடி வரும் தெய்வத்தை வரவேற்பது நம் கடமை. வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி சுவாமிக்கு அர்ச்சனை செய்வது அவசியம்.






      Dinamalar
      Follow us