ADDED : ஜூலை 23, 2023 03:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடவோ குளிக்கவோ கூடாது.
* தண்ணீரில் உங்களது உருவத்தை பார்க்கக்கூடாது.
* திருமணமாகாத பெண்கள் துளசியால் பெருமாளை துதித்தால், விரைவில் கணவரின் வீட்டிற்கு சென்று சுபிட்சமாக வாழ்வர்.
* சுயபுத்தியை பயன்படுத்தாமல் பிறர் கூறுவதை கேட்டு செயல்படுபவனின் வாழ்க்கை, குடத்தில் இட்ட விளக்கைப் போல் பிரகாசம் இல்லாமல் இருக்கும்.
* ஒருவருக்கு முன்போ, பின்போ அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்யக்கூடாது.
* ஒருவர் தன் திறமையை அறியாமல் எந்த விஷயத்திலும் தலையிடக்கூடாது.
* திறந்த வெளியில் காயவைத்திருக்கும் துணிகளை சூரியன் மறைந்த பின் எடுக்கக்கூடாது.
* நதிகளில் நீராடும்போது நீர் வரும் திசையை நோக்கியவாறு தலை முழுகி ஸ்னானம் செய்ய வேண்டும்.

