sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஆக 03, 2023 03:35 PM

Google News

ADDED : ஆக 03, 2023 03:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.பாமா, ரஜோரி கார்டன், டில்லி.

*விரதத்தன்று பகலில் துாங்கலாமா...

கூடாது. பகலில் துாங்காமல் கடவுள் சிந்தனையுடன் இருக்கவே விரதம் இருக்கிறோம்.

சி.கருப்பையா, பணகுடி, திருநெல்வேலி.

*சன்னதி முன் ஏற்கனவே ஏற்றிய விளக்கை நான் பயன்படுத்தலாமா?

ஏற்றிய விளக்கை பயன்படுத்தலாம். பரிகாரத்திற்காக ஏற்றினால் புதிய விளக்கை பயன்படுத்துங்கள்.

எம்.ராகவி, திருப்பனாம்பாக்கம், கடலுார்.

*ஆஷாட நவராத்திரி என்றால் என்ன?

ஆனி மாத அமாவாசைக்கு மறுநாள் முதல்

ஒன்பது நாளும் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும். இது வராகியம்மனுக்கு ஏற்றது.

எல்.பவித்ரா, ஜவ்வாதுபட்டி, திண்டுக்கல்.

*பத்ரகாளி, பிரத்யங்கிரா, வராகியை வழிபட ஏற்ற

நாள் எது?

பத்ரகாளி - வெள்ளி

பிரத்யங்கிரா - அமாவாசை

வராகி - வளர்பிறை பஞ்சமி திதி

எஸ்.பவானி, மாதவரம், சென்னை.

*முளைப்பாரியை வீட்டில் வளர்த்து கோயிலில் செலுத்தலாமா?

செலுத்தலாம். அசைவத்தை தவிர்ப்பதும், தீட்டு சமயத்தில் ஒதுங்கியிருப்பதும் அவசியம்.

கே.நாகராணி, அஞ்சுகிராமம், கன்னியாகுமரி.

*எரியும் சூடம், தீபத்தை வாயால் ஊதக் கூடாதா?

கூடாது. வாயால் ஊதினால் எச்சிலாகி விடும். புனிதமான பூஜைப்பொருட்களை அப்படி செய்யலாமா...

எல்.கணேசன், ராமநாதபுரம், கோயம்புத்துார்.

*பஞ்ச வாத்தியம் என்றால் என்ன?

கோயில்களில் ஐந்து வகை இசைக்கருவிகள் இருக்கும். இதை சுவாமி புறப்பாட்டின் போது இசைப்பர்.

* தோல் - மேளம், மத்தளம்

* துளை - நாதஸ்வரம், புல்லாங்குழல்

* நரம்பு - யாழ், வீணை

* உலோகம் - எக்காளம், கொம்பு, திருச்சின்னம்

* இயற்கை - சங்கு, ஜலதரங்கம்.

எம்.வனஜா, கனகபுரா, பெங்களூரு.

*தீட்டுக்காலத்தில் கட்டிலில் படுக்கலாமா?

படுக்கலாம். அப்போது உபயோகித்த அனைத்து துணிகளையும் தீட்டு கழிந்ததும் நீரில் நனைத்து உலர்த்துவது அவசியம்.

எம்.மாணிக்கவல்லி, சோழவந்தான், மதுரை.

*எங்கள் குடும்பத்தினருக்கு முன்னோர் ஆசி கிடைக்க...

தர்ப்பணம், திதி, சிராத்தம் கொடுப்பது முன்னோரின் ஆசி பெறுவதற்காகவே. அதனால்தான் அவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கிறோம்.






      Dinamalar
      Follow us