sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜன 08, 2014 11:29 AM

Google News

ADDED : ஜன 08, 2014 11:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புத்திரதோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்கள்

பெ. பொன்ராஜபாண்டி, மதுரை

புத்திரதோஷம், இரண்டு விதமாக உண்டு. ஒன்று குழந்தைப் பேறின்மை, மற்றொன்று ஜாதக ரீதியாக குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுவது. குழந்தைப் பேறின்மைக்கு திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் செல்லுதல், சந்தான கோபாலரை வழிபடுதல் நல்லது. ஜாதக ரீதியான புத்திரதோஷத்திற்கு தகுந்த ஜோதிடர் அறிவுரைப்படி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

**பெற்றோர் செய்த பாவம் சந்ததியைத் தொடருமா? அதற்குரிய பரிகாரம் என்ன?

டி.எஸ்.ரகுநாதன், கோவை

பிள்ளைக்கு தெய்வபலம் அதிகமிருந்தால் பெற்றோர் செய்த பாவம் அவர்களைத் தாக்காது. இருந்தாலும், பாவம் சந்ததியைத் தொடரும் என்பது உண்மையே. தெய்வ வழிபாடு, தானதர்மம் மூலம், இதை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

அ. ஏகப்பன், தேவகோட்டை

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.

* சனியின் பாதிப்பிலிருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம்?

எஸ்.புவனா, சென்னை

சனி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி என்று தான் பொருள். இன்றைய விஞ்ஞானிகள் கூட, சனி கிரகத்தை ஆராய்ந்து அது பனிமயமாக இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள். நல்லதைச் செய்ய வேண்டிய காலங்களில் வாரி வழங்குவதில் வள்ளல். கெடுதலைச் செய்ய வேண்டிய சூழலில், சற்று பாதிப்பையும் தரும் குணம் படைத்தவர். எல்லாரும் பயப்படும் அளவிற்கு கெட்டவர் கிடையாது. இவரது பாதிப்பிலிருந்து விடுபட, பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் உயர்ந்தது. மேலும், அன்றைய தினம் காளை மாட்டிற்கு அரிசி, வெல்லம், எள் கலந்து கொடுப்பது சிறந்த பரிகாரம்.

மாடியில் தொட்டிக்குள் துளசிச்செடி வைத்து பூஜிக்கலாமா?

எம். இந்துமதி, காஞ்சிபுரம்

அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தும். கீழ்தளத்தில் வீடு இருப்பவர்கள், நடுமுற்றம், வாசல் அலல்து கொல்லைப்புறத்தில் வைத்து வழிபடுவதே சிறந்தது.






      Dinamalar
      Follow us