sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜன 24, 2014 12:06 PM

Google News

ADDED : ஜன 24, 2014 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கணவன், மனைவி ஒற்றுமை சிறக்க எந்த விரதம் மேற்கொள்ளலாம்?

ஜெ.தங்கமீனாள், மதுரை

தம்பதியர் ஒற்றுமையில் முக்கிய இடம் வகிப்பதே வீட்டின் ஆட்சியைப் பொறுத்து தான். மதுரை மீனாள் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள். உங்கள் வீட்டில் அம்மன் ஆட்சியா? சிதம்பரம் என்றால் ஆண் ஆதிக்கம், மதுரை என்றால் பெண் ஆதிக்கம் என்று விளையாட்டாகச் சொல்வது வழக்கம். ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் மறைந்து, எந்த விஷயமாக இருந்தாலும், இருவரும்

பரஸ்பரம் பேசி முடிவெடுத்தால் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. இது தான் முதல் விரதம். மற்றபடி, திங்களன்று விரதம் இருந்து சிவன் கோயிலில் சோமாஸ்கந்தரை வழிபடுவதும், சனியன்று விரதமிருந்து லட்சுமி நாராயணரை வழிபடுவதும் தம்பதி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

* அர்ச்சகர் அளித்த விபூதியை பூசிக் கொண்ட பின், மீதியை கோயில் தூணில் வைப்பது சரிதானா?

சி. சசிகலா, மயிலாப்பூர்

கூடாது. பூசிக் கொண்டது போக, மீதி விபூதியை வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கிருப்பவர்களுக்கு கொடுப்பது அல்லது வீட்டில் வீபூதிக் கிண்ணத்தில் சேமிப்பது தான் சரியானது. தூணில் போடுவதால் கோயிலின் தூய்மையும், அழகும் பாதிக்கப்படுகின்றன. இதை சரிப்படுத்தவே, நிர்வாகமும் கோயிலில் ஆங்காங்கே கிண்ணம் வைத்து மீதியை போட்டு வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதையும் மீறி தூணில் இட்டுச் செல்வது சரியல்ல. இனியாவது மாற்றுங்கள்.

திருமணச் சடங்கில் மணமக்கள் அக்னியை வலம் வந்து வணங்குவது ஏன்?

டி.கே.சுகுமாரன், கோவை

திருமணச் சடங்கிற்கான தெய்வத்தை அக்னி வளர்த்து அதில் வேள்வி நடத்தி வழிபடுகிறோம். அக்னியும், அந்த தெய்வமும் சாட்சியாக இருந்து திருமணத்தை நடத்திக் கொடுப்பதாக ஐதீகம். மணமக்கள் அவர்களை வலம் வந்து வணங்கும் போது,

அவர்களின் ஆசியால் வாழ்வு நலமாக அமையும்.

** அவசரமாக கிளம்பும்போது ராகுகாலமாக இருந்தால், என்ன பரிகாரம் செய்யலாம்?

ஆர்.எம்.குமரன், கடலூர்

பயப்படத் தேவையில்லை. வீட்டிலோ அல்லது வழியில் ஏதாவது ஒரு கோயிலிலோ அம்பாளை தரிசித்து விட்டுச் செல்லுங்கள். தெய்வநம்பிக்கையுடன் மனதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ராகுகாலமும் நல்லகாலமாகவே அமையும். ஞான

சம்பந்தர் பாடிய கோளறு பதிகத்தை தினமும் படித்தால், எந்நாளும் எப்போதும் கிளம்பலாம்.

இரட்டையாக ஒட்டிய வாழைப்பழத்தை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாதா?

மா.அசோகன், சிவகங்கை

இரட்டை வாழைப்பழம் மட்டுமல்ல... வெடித்து முளைவிட்ட தேங்காய், சுருங்கிய வெற்றிலை, மொட்டு பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது.






      Dinamalar
      Follow us