sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஆக 22, 2014 02:01 PM

Google News

ADDED : ஆக 22, 2014 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ராகு காலத்தில் வீட்டில் இருந்து கிளம்ப நேரிட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?

ராம. முத்துக்குமரன், கடலூர்

துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி சிவப்பு புஷ்பம் சாத்தி வழிபட்டு மனத்தெளிவுடன் கிளம்புங்கள். உங்களுக்கு வெற்றி தான்.



**பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதன் பொருள் என்ன?

அ. ஹேமா, சென்னை

பத்து என்ற சொல் 'எண்ணில்அடங்காத' என்ற வகையில் இங்கு பொருள் தருகிறது. பொதுவாக, எதை வேண்டுமானாலும் பணத்தால் சாதித்து விடலாம் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் பணத்தால் எல்லாமே பெற்று விட முடியாது.

காசியில் வாங்கிய அன்னபூரணி சிலைகள் பல என் வீட்டில் உள்ளன. வழிபாட்டுக்குரியதைத் தவிர மற்றவற்றை என்ன செய்யலாம்?

பி.மணி, மதுரை

பொதுவாக அன்னபூரணி சிலைகள் இது போல் ஒவ்வொரு வீடுகளிலுமே நிறைய உள்ளன. வழக்கமாக, மற்ற தெய்வங்களுக்கு புஷ்பம் சாத்தி பூஜை செய்யும் போது, இந்த விக்ரஹங்களுக்கும் அது போல செய்து விடலாம். விருப்பப்பட்டு யாராவது கேட்டாலும் கொடுக்கலாம்.

கோயில் குளத்தில் துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற்றைச் செய்வது சரியா?

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்

வேறு நீரில் குளித்துச் சுத்தமான பிறகே கோயில் குளத்தில் நீராட வேண்டும் என்பது நியதி. அதன் புனிதத் தன்மையைப் பாதுகாப்பதற்காக இப்படி சொல்லி இருக்கும் போது துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்வது சரியானது அல்ல.

* விநாயகர் பிரம்மச்சாரியா அல்லது சித்தி, புத்தியுடன் திருமணம் ஆனவரா? சொல்லுங்கள்.

ஜி.முத்துலட்சுமி, காரைக்குடி

முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராக இருக்கும் போது பிரம்மச்சாரியாக உள்ளார். வள்ளி, தேவசேனாவுடன் இருக்கும் போது திருமணமானவர் என்கிறோம். அது போலத்தான். பால கணபதி பிரம்மச்சாரி, திருமணமான பிறகு சித்தி, புத்தி சமேத கணபதி என்று போற்றப்படுகிறார். இன்னொரு விஷயம் உலகியல் திருமணங்களோடு இவற்றை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தம்மை வழிபடுபவர்களுக்கு வெற்றியைத் தருபவர் என்பதை சித்தி தேவியும், நல்லறிவைத் தருபவர் என்பதை புத்தி தேவியும் குறிக்கிறார்கள்.

குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் கணித்து எழுத வேண்டும்?

கே.என்.விமலநாதன், சென்னை

ஒரு வயது பூர்த்தியான பிறகு, எப்போது வேண்டுமானாலும் ஜாதகம் கணித்துக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us