sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : செப் 16, 2014 04:37 PM

Google News

ADDED : செப் 16, 2014 04:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

** முருகன் கை கூப்பி நம்மை வணங்குவது போல ஒரு படம் இருக்கிறதே. கடவுள் நம்மை வணங்குவது போல இருப்பது சரிதானா?

ஆர்.ராமலிங்கம், சரவணம்பட்டி

முருகன்சிவலிங்கத்தை வணங்குவதையே இவ்வாறு சித்தரிக்கிறார்கள். தாங்கள் நினைப்பது போல முருகன் நம்மை வணங்கவில்லை. தந்தையை வணங்க வேண்டிய ஒழுக்கத்தை நமக்கு காட்டுகிறார். திருச்செந்தூர் முருகன் பஞ்சலிங்கங்களை வழிபடுபவராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் கோயிலில் இதற்குரிய சித்திரமும் இருக்கிறது

* மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?

ராம முத்து, கடலூர்

மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்ற ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. 'மனம் செம்மைப்படும் போது' என்பதையும் கவனிக்க வேண்டும். செம்மைப்படுவது என்பது ஆசாபாசங்கள் என்னும் அழுக்குகள் நீங்கி தூய்மைஅடைவது என்று பொருள். இந்த மன அழுக்கு களைப் போக்க இன்னும் சோப்புத்தூள் விற்பனைக்கு வரவில்லை. மந்திரம் ஜபிப்பது ஒன்று தான் வழி. இப்படி அதிகமான ஜபங்கள் செய்து மனதிலுள்ள இருள் நீங்கும் போது ஏற்படுவது தான் 'மனமது செம்மையாதல்' எனப்படும். அதாவது வேறு எந்த விருப்பங்களும் இல்லாமல் இறைவனுடைய திருவடிகளை அடைவது ஒன்றே போதும் என்ற நிலையை மனம் முழுமையாக அடையும் போது, விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாகிய மந்திரங்களை(காமிய மந்திரங்களை) ஜபிக்கும் அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, செம்மையடையும் வரை மந்திரம் ஜபிக்க வேண்டும்.

* விளக்கேற்றிய வேளையில் வீட்டில் தூங்கக் கூடாது என்கிறார்கள். இது குழந்தை, நோயாளி போன்றவர்களுக்கும் பொருந்துமா?

எஸ். முருகேசன், திருத்தங்கல்

பொதுவாக வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இவர்கள் அனைவருமே இது போன்ற விரதம் உட்பட பல விஷயங்களில் விதிவிலக்காக கருதப்படுகிறார்கள்.

பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?

எம். சோமன், மதுரை

வேதம் படிக்கவும், வேதநெறி நிற்பதற்கும் வழங்கப்படுகின்ற அதிகார அடையாளமே பூணூல். இது பற்றி இரு இடங்களில் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூணூலும், குடுமியும் வேதாந்தத்தையும், ஞானத்தையும் உணர்த்தும் அடையாளங்களாக அந்தணர்களுக்கு உரியது என 'அந்தணர் ஒழுக்கம்' என்னும் பகுதியிலும், ஆறாம் தந்திரத்தில் 'திருநீறு' அதிகாரத்தில், 'நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்' எனவும் இதன் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.

சிலர் நீராடி விட்டு ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்களே, இது சரியா?

ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்

இது தவறு. நன்கு துவைத்து காய்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என நமது தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.






      Dinamalar
      Follow us