sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : நவ 11, 2014 03:41 PM

Google News

ADDED : நவ 11, 2014 03:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

** பணவசதி இல்லாத காரணத்தினால் நேர்த்திக் கடனைத் தள்ளிப் போடலாமா?

பி.முனியசாமி, திண்டுக்கல்

பணவசதிக்குத் தக்கவாறு நேர்த்திக் கடனை வேண்டிக் கொண்டிருக்கலாமே! அப்படிச் செய்திருந்தால் தள்ளி போடுகிறோமே என்ற கவலை கொள்ளத் தேவையில்லை அல்லவா? இதற்கெல்லாம் தெய்வம் கோபித்துக் கொள்ளாது. முடிந்தபோது நேர்த்திக்கடனைச் செலுத்தி விடுங்கள்.



* கர்ப்பிணிகள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளலாமா?

ம.சரஸ்வதி, சென்னை

ஆறுமாதத்திற்கு உட்பட்டு இருந்தால் கலந்து கொள்ளலாம். அதிக நேரம் தரையில் உட்கார கர்ப்பிணி பெண்களால் இயலாது என்பதால், தவிர்க்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.

கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பது ஏன்?

எஸ்.எல்.பிச்சைமுத்து, காஞ்சிபுரம்

'கோபுரம் பாத யுகளம்' என்கிறது ஆகம சாஸ்திரம். அதாவது கோபுரம் இறைவனுடைய திருவடியாகும் என்பது பொருள். அவரின் திருவடியைத் தரிசிப்பது அரிது தானே! நமக்காக கருணை கூர்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் படியாக திருவடிகளாகிய கோபுர தரிசனத்தை இறைவன் அருள்கிறார். இதைத் தரிசிப்பவர்க்கு கோடி புண்ணியம் கிடைக்கத் தானே செய்யும்.

யாக சாலை பூஜையில் பூர்ணாஹுதி என்கிறார்களே. அதன் பொருள் என்ன?

அ.சுரேந்தர், தியாக துருகம்

யாகத்தில் போடப்படும் பொருட்களை ஆஹுதி செய்தல் என்பார்கள். செய்ய வேண்டிய ஆஹுதிகள் நிறைவடைந்து விட்டதைக் குறிக்கும் விதத்தில் செய்யப்படுவது பூர்ணாஹுதியாகும். பூர்ணம் என்பதற்கு நிறைவு என்பது பொருள்.



* சங்காபிஷேகம் செய்வதன் சிறப்பு என்ன?

எஸ்.பொன்கனி, கோவை

அபிஷேகத்திற்குப் பயன்படும் பொருட்களில் மண்ணாலான கலசத்தை விட செம்பு உயர்ந்தது. செம்பை விட வெள்ளியும், அதை விட தங்கக் கலசமும் உயர்ந்தது. இவை அனைத்தையும் விட சங்கு உயர்ந்தது என சாஸ்திரம் கூறுகிறது. சங்காபிஷேகம் செய்தால் அது தேவாமிர்தத்தால் சுவாமியை அபிஷேகம் செய்வதற்கு ஒப்பானது.

ஐந்தெழுத்து மந்திரத்தை நமசிவாய, சிவாயநம என இருவிதமாக ஜெபிக்கிறார்களே. எதைச்

சொல்வது நன்மையளிக்கும்?

ஆர்.கோதண்டபாணி, விருத்தாசலம்

இரண்டுமே நன்மை அளிப்பவையே. சமய தீட்சை பெற்றவர்கள் நமசிவாய என்னும் ஸ்தூல பஞ்சாட்சர மந்திரத்தையும், விசேஷ தீட்சை பெற்றவர்கள் சிவாயநம என்னும் சூட்சும பஞ்சாட்சரத்தையும் ஜெபிப்பார்கள். இது விபரங்களை தக்க குரு நாதரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.






      Dinamalar
      Follow us